பூச்சிகள் நம்மைச் சுற்றி எங்கும் உள்ளன. நம்முடைய வீட்டில் வசித்துக்கொண்டு, நமது உடலையும், உடையையும் துளைக்கின்றன. ஆயுளையே அழிக்கின்றன. பூமியில் பூச்சிகள் இல்லாத இடமே கிடையாது. ஆழமான குகைகளிலும் அவை காணப்படுகின்றன. சுமார் 40 பூச்சியினங்கள், பனிக்கட்டிப் பிரதேசமான தென் துருவத்தில் வசிக்கினறன.
உதாரணமாக, தேனீக்கள், வண்டுகள், விட்டில்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவை விறைத்துப்போன நிலையிலும் உயிர் வாழ்கின்றன. விலங்குகளின் உடலைத் துளைத்து அவற்றின் இறைச்சியை உண்ணும் பூச்சிகளும் உள்ளன. கொடுமையான பாலைவனங்களிலும், நீர்ப்பெருக்கம் உள்ள ஆறுகளிலும், நடுக்கடலின் நீர்மட்டத்திலும் பூச்சிகள் உல்லாசமாக வாழ்கின்றன. பாறைகளின் பிளவுகளிலும் கூட பூச்சிகள் வாழ்கின்றன.
பூச்சிகள் கொடிய வெப்பநிலையையும், கடுமையான தப்பவெப்பநிலையையும் பொருட்படுத்துவதில்லை. மனிதன் ஓர் இடத்திலிருந்து காற்றை அகற்றி அதை வெற்றிடமாக்கினாலும் அங்கும் பூச்சிகள் வாழ முடியும்.
சில ஈக்கள் முற்றிலும் உப்பிலேயே வாழ்கின்றன. அவற்றின் சில உறவினர்கள் பெட்ரோல் ஈக்கள் எனப்படுகின்றன. அவை அமரிக்காவின் வட கலிபோர்னியாவில் உள்ள பெட்ரோல் ஊற்றுகளின் அருகில் உள்ள கழிவு எண்ணைக் குட்டைகளில் வசிக்கின்றன.
மனிதனுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நஞ்சாக உள்ள கரியமில வாயுவில் அந்தப் பூச்சிகள் மணிக்கணக்கில் வசிக்கின்றன. சில பூச்சிகள் தண்ணீர் இல்லாத இடங்களில் தாமே தண்ணீர் உற்பத்தி செய்து கொண்டு வாழ்கின்றன. அவை தமது உடலில் உள்ள மாவுச் சத்து எரி பொருளை எரித்துத் தமக்கு வேண்டிய தண்ணீரைப் பெறுகின்றன.
பூச்சியினங்களிள் பொதுவாக மனிதகுலத்துக்குத் தீங்கு விளைவித்தாலும் நன்மை செய்யும் பூச்சிகளும் இருக்கின்றன என்பது ஆறுதல் அளிக்கும் விஷயம்!

வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...
No comments:
Post a Comment