Thursday, December 22, 2011

வவ்வால் பறக்கும் ரகசியம்


    குட்டி போட்டு பால் தருவதால், வவ்வாலை பறவை வகைகளில் சேர்க்க முடியாது. வவ்வாலுக்கு கண்கள் உண்டு இருந்தாலும் அதற்கு பார்வைத்திறன் தேவையில்லை. வவ்வால் 'சவுண்டு ரேஞ்சிங்' என்ற முறைப்படி இருளில் மோதிக்கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒலி அலைகள் உதவுகின்றன. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் சைக்கிள்கள் (சைக்கிள் என்பது ஒலிகளுக்கான அளவு) வரைதான் ஒலி அலைகளை உணர முடியும்.
   வவ்வாலின் தொண்டையில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சைக்கிள் அளவில் ஒலி உண்டாகிறது. இந்த சத்தத்தை நம்மால் உணர முடியாது. இவை இந்த சத்தத்தை சின்ன சின்ன துடிப்பலைகளாகத் தான் வெளிப்படுத்தும். வவ்வால்கள் வினாடிக்கு 5 முதல் 60 வரை துடிப்பலைகளை வெளிப்படுத்தும்.
    ஒவ்வொரு துடிப்பும் மிகவும் குறைந்த கால அளவைக் கொண்டது. ஒரு வினாடியில் 5 ஆயிரத்தில் ஒரு பாகம்தான்.
    17 மீட்டர் தூரத்தில் ஏதாவது தடை இருந்தால், வவ்வால் வெளிப்படுத்தும் அல்ட்டாசவுண்ட் அதைப் போய் அடைந்து திரும்ப ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரமாகும். எனவே வெளிப்படுத்தும் சவுண்டுக்கும், எதிரொலித்து திரும்பும் சவுண்டுக்கும், இடையே உள்ள நேர வித்தியாசத்தை உணர்ந்து, தடை இருக்கும் இடத்தை அறிந்து அதற்கேற்ப சாமர்த்தியமாக பறக்கிறது வவ்வால்.

காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன, பெருமளவில் மனிதகுலத்திற்கு...

No comments: