Wednesday, December 21, 2011

கழுதைப்புலி

     கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர்   விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை திரிந்துகொண்டிருக்கும்.  
   கழுதைப்புலி அசாத்திய திறமை உடைய ஒரு விலங்கு. மோப்பம், சப்தம் ஆகியவற்றை உணர்வதில் கில்லாடி. பார்க் சாதாரனமாக இருந்தாலும் மிகவும் கொடுரமான விலங்கு. விதவிதமா ஊளையிட்டே தன் இன நன்பர்களுக்கு சொல்ல நினைக்கும் சங்கதியைத் தெரிவித்து விடுமாம். இதனுடைய வாலின் அசைவுகளை உன்னிப்பாகக் கவனித்தாலே போதும் அதன் எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்ளலாம். வால் நுனி பூமியை நோக்கி இருந்தால், சாதரனமாக இருக்கிறது என்று அர்த்தம். சிலிர்த்துக்கொண்டு நிமிர்ந்து  இருந்தால் எதற்கும் தயாராகிவிட்டது என்று அர்த்தம். வால் வில்லாய் வளைந்து முதுகைத் தொட்டுக் கொண்டு இருந்தால், 'ஜாலியாக' உள்ளது என்று அர்த்தம். வாலைச்சுருட்டி பின்னங்கால்களுக்கு இடையியே இடுக்கி வைத்துக்கொண்டு இருந்தால், எதையோ பார்த்து பயந்து போய் ஓடுகிறது என்று அர்த்தம்.
   கழுதைப் புலிகள் உற்சாகமான நேரங்களில், காடு அதிர சப்த மாக பாடுமாம். கழுதைப்புலிகள் வேட்டையாட நினைக்கும் விலங்கை கூட்டம் போட்டுத்தான் தேர்ந்தெடுக்குமாம். கழுதைப்புலிகளின் எண்ணிக்கை அதிகமமாக இருந்தால், இன்று பெரிய வேட்டை நடக்கப்போகிறது என்று அர்த்தம். அந்தி சாயிம் நேரத்தில் தான் கழுதைப்புலிகள் கொலைவெறியுடன் வேட்டையாடச் செல்லும். எந்த வகை விலங்கை தேர்ந்தெடுத்தாலும் எந்த விலங்கு பலவீனமாக உள்ளது என்று கண்டுபிடித்து அதை தொடர்ந்து சென்று வேட்டையாடுமாம். எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து தாக்கும்.
   கழுதைப்புலி வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். பெண் கழுதைப்புலிகள் 2-3 வருடங்களில் பருவமடைந்து இனப்பெருக்கத்திற்கு தயராகும். இதன் பேறுகாலம் 88 முதல் 92 நாட்களாகும். தாய் கழுதைப்புலி குட்டிகளை பெரும்பாலும் குகைகளில் ஈன்றெடுக்கும். பொதுவாக 1 முதல் 5 குட்டிகள் வரை ஈனும். குட்டிகள் பிறந்த 30 நாட்களுக்குப் பிறகு மாமிச உணவை உட்கொள்ள ஆரம்பிக்கும்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...

No comments: