Monday, August 22, 2011

எங்கே? அந்த கிராமம்

   ஒவ்வொரு சமயமும் எங்கள் கிரமத்திற்கு போகும்போது ஒரு நாள்தான் இருக்க முடியும், உடனே திரும்பி வர நேர்ந்துவிடும். சமிபத்தில் ஒரு ஐந்து நாள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்பொழுது நான் சின்ன வயதில் இந்த கிராமம் எப்படி இருந்தது இப்போது எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது, எங்கே? அந்த கிராமம், எப்படி இருந்தது என்று நினைத்து  நினைத்ப் பார்தேன். 
    முன்பு கிராமத்தைச் சுற்றி பாசன வயல் வெளிகள், தோட்டங்கள்! தோட்டங்களைப் பாதுகாக்க கருவேல முள் வேலிகள். வேலிகளின் மீது பச்சை நிறத்தில் படர்ந்துள்ள பல வகை செடி, கொடிகள். வேலிகளில் மீது அமரும் பூச்சிகளை பிடிக்க அமர்ந்திருக்கும் ஓணான்களைக் கல்லெறிந்து காயப்படுத்தும் சிறுவர்கள். அதிகாலையில் வயல் வெளிகளுக்கு ஏர் ஓட்ட செல்பவர் இரண்டு காளை மாடுகளை கையில் பிடித்து, கலப்பையை தோலில் சுமந்து செல்லும் காட்சி, காட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்கள், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களைக் கொண்டுவந்து போரடிக்கும்  கலத்து மேடு.
   ஓட்டு வீடுகள், ஓலை வீடுகள், ஓலைக்குடிசைகள் அங்கொன்று இங்கொன்று காரை வீடுகள் வீட்டுச் சுவர்களில் ஒட்டப்பட்டுக் காயவைக்கப்பட்டுள்ள, சாண வறட்டிகள். வீட்டுமுன் படுத்து உறங்கும் தெரு நாய்கள், வீட்டுத் தின்னையின் அடியில் உள்ள கோழிக் கூடு.
    வீட்டின் கொல்லைப் புறத்தில் முருங்கை மரம். நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் வேப்பமரங்கள். வீட்டு உபயோகத்திற்கு வளர்க்கும் பயிர்க் குழிகளில் பூசணிகாய், சுரைக்காய். புடல், பீற்கங்காய், பாகற்காய், அவரைக் கொடி. கொல்லை தொளுவத்தில் கட்டியிருக்கும் பசுவும், கன்றும். தெருக்களில் இரட்டை மாடுகளால் இழுக்கப்படும் கட்டைவண்டி காளைமாடுகள், காளைமாடுகளைக் கயிற்றால் கட்டி கீழே படுக்கவைத்து லாடம் கட்டுவது. வீடுகளில் கட்டி வைத்திருக்கும் ஆடுகள், மந்தையில் படுத்திருக்கும் ஆட்டு மந்தைகள், கோயில், தெப்பக்குளம், அதில் நீந்தித் திரியும் சிறுவர், சிறுமிகள் அதில் உள்ள மீன்கள் அதில் திரியும் தண்ணீர் பாம்புகள்.
  தெருக்களில் சிறுவர்கள் அரைக்கால் சட்டையுடன் சைக்கிள் டயர்களையும் பனம் நுங்கின் குடுக்கைகளை வண்டியாக ஓட்டும் காட்சி, பம்பரம் கிட்டி, குண்டு விளையாட்டு. வயதானவர்கள் பஞ்சாயத்து தின்னையில் வெட்டிகதை பேசி தூங்கித்திரியும் பெரியவர்கள். வயதான அப்பத்தா, அம்மாச்சிமார்கள், காதுகளில் பெரிய பெரிய பாம்படம், தந்தட்டிகள் சுமக்கும் அதிசய காட்சிகள் அவர்களின் இடுப்பில், சொருகி வைத்திருக்கும் சுருக்குப் பை.
    தெருக்களில் ஆங்காங்கே திரியும் நாட்டுக்கோழிகள். வீடுகளின் முன்வரந்தாவில், வைக்கப்பட்டிருக்கும் போட்டோக்கள், போட்டோகேகளின் பின்னால் கூடுகட்டி வாழும் சிட்டுக் குருவிகள். பெரிய அரசமரம், ஆலமரம், நாவல்மரம். இதில் பழம் பழுக்கும் போது பழம் தின்ன வரும் பலவகை பறவைகளின் இனிமையான சத்தங்கள். மரப்பொந்துகளில் வாழும் கிளிகள், மைனாக்கள், இரவில் அலரும் ஆந்தைகள் என விதவிதமான பறவைகள் கண்மாய், கண்மாயில் நீந்தித் திரியும் நீர்க் கோழிகள், கொக்கு, நாரை பேன்ற பறவைகள் கண்மாயிக்கு தண்ணீர் வரும் ஆறு, ஓடைகள் ஊரணி, ஊத்துகள் மேடு, பள்ளம், நீர் ஆதாரங்கள் இதில் படர்ந்திருக்கும் தாமரை கொடிகள், இது போல் இன்னும் நிறைய. இது எல்லாம் உள்ள கிராமம் எங்கே? இதைவிட ஒருத்தருக்கொருவர் உதவும் கிராமத்து பன்பும் எங்கே?   
படம்  தினமலர்...

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

2 comments:

எனது கவிதைகள்... said...

நல்ல பகிற்விற்க்கு நன்றி சார்!

அந்த பழைய கிராமம், மக்கள், இயற்க்கை இனி ஒருபொழுதும் கிடைக்காது சார்!


உண்மைவிரும்பி.
மும்பை.

S.Gnanasekar said...

எனது இடுகைக்கு வந்தமைக்கு நன்றி நன்பர் அவர்களே.. (எனது கவிதைகள்...)