Thursday, August 18, 2011

விலங்குகளின் வினோதமான தூக்கம்


   குறும்புத்தனத்துக்குப் பெயர் பெற்ற ராக்கூன் என்ற ஒருவகை கீரிப்பிள்ளை போன்ற பிராணி, நல்ல குறட்டை ஒலியுடன் ஆழ்ந்து உரங்கும். அத்துடன் மனிதரைப் போல் இப்பிராணிகள் கனவும் காணுகின்றன என்று தூங்கும் போது இவற்றின் உடல் அசைவைக் கொண்டு விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
   நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் உடம்பைட் சுருட்டிக் கொண்டு உடலின் வெப்பத்தை காப்பாற்றி, தலையை உடலின் உள்பதிந்து தூங்கும்.
   ஆடு, மாடு, மான் போன்ற தாவர உண்ணிகள் நான்கு கால்களையும் மடித்து, தலையை உடலின் மேல் வைத்துத் தூங்கும்.
   யானை மற்றும் குதிரை இன விலங்குகள் நின்று கொண்டே தூங்கும். யானை தூங்கும்போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொறு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளும்.
   பாம்பு வகையைச் சேர்ந்தவை அனைத்தும் உடலை கடிகார ஸ்பிரிங் போல சுருட்டிக்கொண்டு தூங்கும். பாம்புகள் தூங்கும்போது கண்கள் திறந்த வண்ணமே இருக்கும்.
   சிலவகை மான்கள் தூங்கும்போது தமது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் அற்புத சக்தி கொண்டவை.
   சிலவகை ஐரோப்பியக் கிள்கள், வவ்வால் போலவே கால்களால் மேலே உள்ள கிளைகளைப் பற்றிக்கொண்டு தலை அதன் மார்பைப் பார்த்திருக்குமாறு ஒய்யாரமாகத் தூங்கும்.
   பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்கும் வழக்கம் கொண்டிருந்தாலும், ஆந்தை இனப் பறவைகள் பகலில் தூங்கி இரவில் இரை தேடும் பணியைச் செய்கின்றன. வாத்து தரையில் நின்றுகொண்டோ, தண்ணீரில் மிதந்துகொண்டோ தூங்கும்.
   சுறுசுறுப்புக்குப் பெயர் போன எறும்புகள், மண்ணீல் அழகான மணற்படுக்கை போன்ற திண்டுகளை ஏற்படுத்தி, கால்களை உடலுடன் அழுத்திவைத்து ஒய்யாரமாய் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிம்மதியாய் உறங்குகின்றன.

வனவிலங்குகள், பறவைகள், பூச்சிகளை காத்து இயற்கையை காப்போம்...

No comments: