கல்மீன் இது இந்திய பசிபிக்கிக் வெப்பமண்டல கடல் பகுதியில் காணப்படுகின்றன, இது 20 இனங்கள் இருக்கிறது. கொடிய நச்சுத்தன்மையுடையவை, கரடுமுரடான உடல் கீழ்தாடை ஒரு அசிங்கமான மேல் நோக்கிய பெரிய தலை மற்றும் சிறிய கண்கள் அதன் பெயர் குறிப்பிடுவதுபோல் ஒழுங்கற்ற புள்ளிகள் மற்றும் உடல் முழுவதும் மருக்கள் ஒரு முதுகு துடுப்பு அது கற்கள் மத்தியில் அல்லது கடற் பவள பாறை பிளவுகளில் புதைக்கப்பட்டது போல் கல் மீன் தன் நிறம் மற்றும் வடிவத்தை கல் போன்று கண்ணுக்கு தெரியாத உருவத்தில் உருமாற்றிருக்கும்.
ஸ்டோன் மீன் புரதங்கள் கொண்ட, உலகின் மிக கொடிய விஷ மீனக கருதப்படுகிறது. ஒரு கல் மீனை துரதிர்ஷ்டவசமாக மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் மிதித்துவிட்டாலோ இந்த மீன் உடலில் விஷம் புகுத்த என்று பதிமூன்று மிக நீண்ட ஈட்டிகளை கொண்டிருக்கிறது அதன் விஷம் உடலில் பாயும் ஆழம் பொறுத்து திசு இறப்பு, கடுமையான வலி, அதிர்ச்சி, பக்கவாதம் ஏற்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை தாக்கும் அதனால் இது 2-3 மணி நேரத்திற்குள் சிகிச்சை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம். கொடிய சிலந்தி மற்றும் பாம்பு கடித்தல் போலவே சீக்கிரம் சிகிச்சை எடுக்கவேண்டும். உடனடியாக குறைந்தது 43 டிகிரி செல்சியஸ் சுடு நீரை காயம்பட்ட இடத்தில் விடவேண்டும். இந்த மீன் இருக்கும் இந்திய பெருங்கடல் பகுதியில் மென்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
இயற்கையின் அதிசயம் கடல் வாழ் உயிரினம்...
2 comments:
ketkave payamaaga ulladhu. இந்தியாவில் இந்த மீன் இல்லைதானே!!!!
இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html
நன்றி நன்பர் கார்த்திக் அவர்களே.
கல் மீன் (ஸ்டோன் பிஸ்) பொதுவாக வெப்ப மண்டலக் கடலில், பவளப் பாறை, பவளத் திட்டுகள் உள்ள கடலில் இருக்கும். அரேபியாவின் மிக நீண்ட கடலோரம், செங்கடல், இந்திய பெருங்கடல், பசிபிக் தீவுகள் வடக்கு ஆஸ்திரேலியா இப்படி பல இடங்களில் இருக்கிறது. அறிந்ததை பகிர்ந்துள்ளேன்.
Post a Comment