ஓரிடத்தில் உள்ள பண்டங்களை இன்னேரிடத்திற் கொண்டு சென்று விற்றுப்பொருள் ஈட்டுதல் வாணிகம் எனப்படும். பல இடங்களிலுள்ள மக்கள் பண்டங்களை விற்கவும் வாங்கவும் கூடும் இடங்கள் அங்காடிகள் (சந்தைகள்) எனப்பட்டன. சந்தை என்பது சந்தி என்பதினின்றும் பிறந்தது. உள்நாட்டுச் சந்தைகளுக்குப் பண்டங்கள், கழுதை பொதி மாடு வண்டிகளிற் கொண்டுபோகப்பட்டன. இன்று நமது நாடுகளில் ஆங்காங்கே நடைபெறும் சந்தைகளுக்கும் முற்காலச் சந்தைகளுக்கும் அதிக வேறுபாடு இருக்கவில்லை.
தமிழ் மக்கள் மேற்கு ஆசிய நாடுகளோடு மிகப் பழங்காலந் தொட்டுக் கடல் வழியாகவும் தரைவழியாகவும் வாணிகம் நடத்தினர். சிந்துநதி முகத்துவாரத்திலிருந்து எகிப்பிலுள்ள மெம்பிஸ் நகர்வரையில் பாரசீகத்துக்கூடாகப் பெரிய தரைப்பாதையிருந்தது.
இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளின் முன் எகிப்தியர் மரக்கலம் வழியாகத் தமமிழ் நாட்டுக்கு வந்து மீண்ட வரலாறு அவர்களின் பட எழுத்துப் புத்தகங்களிற் காணப்படுகின்றது. அவர்கள் மொழியில் குரங்கு, யானைத் தந்தம் என்பவைகளைக் குறிக்க வழங்கிய பெயர்கள் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கருதப்படுகின்றன.
"திரைகடலோடியுந் திரவியந் தேடு " தெண்ணீர்க்கடல் கடந்தும் " "நாவாய் கவிழ்ந்த நாய்கன் போல " என்னும் தமிழ் வழக்குகளால் தமிழ் மக்கள் கடல் கடந்து தொலைவிலுள்ள நாடுகளுக்குச் செந்று பொருளீட்டினார்கள் என நன்கு அறிகிறோம். சுமத்திரா, யாவா, இந்துச்சீனம் முதலிய நாடுகளில் வாணிகத்தின் பொருட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளுக்கு முன் சென்று தங்கிய தமிழரே அந்நாடுகளில் அரசுகளைக் கோலி அவைகளை ஆண்டு வந்தனர். இன்றும் அந்நாடுகளில் தமிழர் நாகரிகத்தின் அடையாளங்கள் பல காணப்படுகின்றன.
கிறித்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தின் நாட்டை ஆண்ட சலமன் என்னும் அரசன் தனது மாலுமிகளை அனுப்பித் தந்தம், மயில், குரங்கு, பொன், யானைத் தந்தம், அகிற்கட்டை முதலிய பல பொருள்களைத் தமிழ் நாட்டினின்றும் பெற்றான். இப்பண்டங்களைக் குறிக்கப் பலஸ்தின் மக்கள் வழங்கிய தமிழ்ப் பெயர்கள் சிறு மாறுபாட்டுடன் எபிரேய மொழியிற் காணப்படுகின்றன.
கறுவா, இஞ்சி, திப்பிலி, அரிசி முதலிய பொருள்களைக் குறிக்கக் கிரேக்க மொழியில் வழங்கிட பெயர்களும் தமிழ்ச் சொற்களின் திரிபுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் எகிப்து, மேற்கு ஆசியா, சீனம் முதலிய நாடுகளுக்குச் சென்று வாணிகம் நடத்தியதற்கு ஆதாரங்கள் பல பிறமொழிகளில் எழுதப்பட்ட பழைய நூல்களிற் காணப்படுகின்றன.
தமிழர் 6000 ஆண்டுகளுக்கு முன்னரேயே நாணயங்களின் பயனை அறிந்திருந்தனர். இது பழைய சிந்துவெளிப் புதைபொருல் ஆராய்ச்சியால் நன்கு தெளிவுறுகின்றது.
நமது நாடு தொடரும்....
இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...
2 comments:
ஆஜர்!!!! உள்ளேன் ஐயா!!!!!!!
நன்றி நன்பர் !ஸ்பார்க் கார்த்திக்@ அவர்களே நீங்கள் நமது நாடு 30வது அத்தியாயத்தை படித்துள்ளீர்கள் ஏறக்குறைய அது பாடம்தான் முதல் அத்தாயாயத்தில் இருந்து படிக்கவும். தமிழர்கள், நாம் தான் உலகத்தின் முன்னோடிகள் என்று பாலசான்றுகள் உள்ளன. அதில் நாம் சிறிதளவு அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், 1945 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி & சென்னை. யாழ்ப்பாணத்து நாவாலியூர் திருவாளர் ந.சி.கந்தையா பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. நான் முதலில் அதன் கருத்தைமட்டும் கூறநினைத்தேன், அது முழுமையாக வரவில்லை. அதலால் நம்மால் முடிந்த அளவுக்கு மற்றவருக்கு (பயனுள்ளவருக்கு) தெரியட்டும் என்று அதை அப்படியே இடுகையில் இடுகிறேன். இது மாதிரி நிறைய இருக்கிறது, தமிழர்தான் முன்னேடி என்று.www.thamizham.net
Post a Comment