Wednesday, July 6, 2011

கடல் விசிறி

   மன்னார் வளைகுடாவில் உள்ள உயிரினங்களில் பவளப்பாறை உயரினங் கள் மிகவும் "காஸ்ட்லி' ஆனவை. இதில் மிருதுவானவை, கடினமானவை என இருவகைகள் உள்ளன. மிருதுவான பவளப் பாறை உயிரினங்கள் மருத்துவத்துக்கு பெரிய அளவில் உதவுகின்றன. அந்த வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்த உயிரினம் தான் "கடல் விசிறி'.
   கடலின் அடியில் மட்டுமே வாழும் இவை ஓரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச்சிறப்பு. ஆண்டுக்கு ஒரு செ.மீ., குறைவான வளர்ச்சியே இவற்றுக்கு உண்டு. இவற்றின் உருவ அமைப்பை பார்க்கும் வளர்ச்சியை பெற குறைந்தது 15 ஆண்டுகள் ஆகும். இதனால் இவை நீண்ட நாள் வளரும் உயிரினமாகிறது. கடலின் அடியில் இருக்கும் இதன் உருவ அமைப்பு மீன் உற்பத்தி, நண்டு, சிப்பிகள் இனப்பெருக்கத்துக்கு பேருதவியாக உள்ளது. கடல் அடியில் கலங்கம் ஏற்படாமல் இருக்க "கடல் விசிறி'கள் பங்கு முக்கியமானதாகும்.
   பவளப் பாறை வகையை சேர்ந்த உயிரினம் என்பதை தவிர்த்து, பவளப்பாறை யை யொட்டிய பகுதியில் தான் இவை காணப்படும். இவற்றின் மருத்துவ குணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் தற்போதும் நடந்து வருகிறது. இதன் முக்கியத்துவம் அறியாமல்இதை மன்னார் வளைகுடாவில் மீனவர்கள் வீணடித்து வருகின்றனர். மிருதுவான இவை மடிவலைகளில் பெரும்பாலும் சிக்கிவிடுகின்றன. தொடர்ந்து அழிந்து வரும் இந்த இனத்தின் வகை தற்போது 20க்கும் குறைவாகவே மன்னார் வளைகுடாவில் உள்ளன.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்...

No comments: