ஆதிகாலந் தொட்டு மக்கள் சாவுக்கு மிக அஞ்சினார்கள். இறந்தபின் உயிகள் இவ்வுலகத்திலோ வேறு உலகத்திலோ ஆவிகளாக உறைகின்றன என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவே இறந்தவர்களை அடக்கஞ் செய்யும்போது அவர்களின் பக்கத்தில் உணவும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களும் வைக்கப்பட்டன. இறந்தவர்களின் ஆவிகள் மக்களுக்கு நன்மைகளையும் தீமைகளையும் செய்யவல்லன என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்தது.

பின்பு மலையின் வடிவைக் குறிக்கும் முக்கோணக் கற்கல் ஞாயிற்றின் குறியாக நட்டு வழிபடப்பட்டன. இக்கற்களே சிவலிங்கங்களாகும். சிவலிங்கங்கள் நிழல் மரங்களின் கீழ் வைத்து வழிபடப்பட்டன. அவைகளைச் சுற்றிக் கட்டிடம் எழுந்தது. அஃது அமைப்பில் அரசனின் அரன்மனையை ஒத்தது. அங்கு நடத்தப்படும் செய்கை ஓர் அரசனுக்கு அவன் ஏவலாளர் நாள் முழுவதும் செய்யும் தொண்டுகளை ஒப்பன. மக்கள் நல்வினை தீவினைகளைப் பற்றிப் பகுத்தறிவுடையவர்களானார்கள். ஆகவே நல்லொழுக்க விதிகள் சமயத்துடன் சேர்க்கப்பட்டன. இதனை வலியுறுத்தும் பொருட்டுத் துறக்கம் நரகக் கொள்கைகளும் எழுந்தன. பின்பு படிப்படியே உயிர், உலகம், இறை என்பவைகளைப் பற்றிய மெய்யுணர்வு ஆராய்ச்சி உண்டாயிற்று.
இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...
No comments:
Post a Comment