Saturday, June 6, 2009

ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல்

பயணிகளிடம் சோதனை தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து ரயில் பயணிகளிடம் பரிசோதனை என்ற பெயரில் போலிசார் நடத்தும் கூத்து இருக்கே இதை சொல்லி மாலாது. ஒரு அசம்பாவிதம் நடந்தாலோ, நடத்ப்படலாம் என எச்சரித்தாலோ உடனே மெட்டல் டிடக்டர், ஸ்கேன் என்று தடபுடல் பன்னுவாங்க பாருங்க அனுபவித்தாள்தான் தெரியும்.

பயணிகள் பைகள், பேக், பிரிப்கேஸ் எல்லாத்தையும் அக்குவேர் ஆணிவேராக பிரிச்சு போட்டு. வீட்டில் இருந்து துணிகளை நன்கு தேய்த்து எடுத்து வச்சது இப்படி ஆனால் எப்படி இருக்கும் பயணிகளிடம் நாகரிகமாக நடக்கவும். இதில் சில பயணிகளின் உடமைகள் கானாமல் போய்விடுகிறது. பயணிகள் உள்ளே செல்லும் வழியில்தான் காவல் துறை சோதனை செய்கிரார்கள்.ஆனால் இரயில், பஸ் நிலையங்களில் நிறைய ஓட்டை வழிகள் உள்ளது அங்கு எந்த கண்கானிப்பும் கிடையாது. எப்பொழுதும் விழிப்புடன் இருப்பது கிடையாது. அந்தந்த நேரத்துக்கு தான் நடவடிக்கை எடுக்கிறார்கள்.தினமும் சோதனை செய்தாள் பயணிகள் அதற்க்கு தயாராக வருவார்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள். காவல் துறைக்கும் சோதனை செய்வது எளிமையாக இருக்கும். தவரு செய்ய வருபவனும் பயப்படுவான்.அதனால் ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல் இல்லாமல் தினமும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சோ.ஞானசேகர்.

1 comment:

கோவி.கண்ணன் said...

//ஒருநாள் கூத்துக்கு மீசையை எடுத்த கதை போல் இல்லாமல் தினமும் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.

சோ.ஞானசேகர்.
//

சரியான கூற்று !

பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகளின் ஆடைகளைக் கூட அவிழ்த்து அம்மணமாக்கும் கூத்துகளும் உண்டு. பொதுமக்களின் நலனுக்காகத்தான் காவல் துறை என்பதை காவல் துறையே மறந்துவிடுகிறது.