தங்கம் என நினைத்து செம்பு துண்டுகளை சேகரித்த மக்கள்
தங்கம் என நினைத்து செம்பு துண்டுகளை சேகரித்த மக்கள் சென்னையை அடுத்த மதுரவாயிலில் லாரியில் இரிந்து சிந்திய செம்பு துண்டுகளை தங்கம் என நினைத்து சேகரிக்க குவிந்த பொதுமக்கள் கூட்டத்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்க்குள் தங்கத் துண்ட்கள் சாலையில் கிடப்பதாகவும், பெதுமக்கள் பலர் சேகரிப்பதாகவும் மதுரவாயில் பகுதியில் வதந்திபரவியது. இதனை நம்பி சாலையில் திரண்ட மக்கள் தங்ம் என நிணைத்து செம்பு துண்டுகளை போட்டி போட்டு சேகரிக்கத் தொடங்கினர். சாலையில் கிடந்தது தங்கம் இல்லை செம்புத் துண்டுகள் என்பது தெரிந்து பலர் ஏமாற்றத்துடன் சென்றனர். இது போல்தான் ஆயில், பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் சமயத்தில் விபத்துக்கு உள்ளாவது உண்டு. அந்த நேரத்தில் லாரியில் இருக்கும் ஆயில் சிந்தும் அதைபிடிக்க பொதுமக்கள் போட்டா போட்டி நடக்கும். அந்தநேரத்தில் திடிர் என்று தீ பற்றிக் கொள்ளும் மக்களும் சேர்ந்து எரிந்து சாவார்கள் இது அடிக்கடி நடக்கும் சம்பவம். இலவசமாக எது கிடைத்தாலும் அடித்து பிடித்து ஓடுவது உயிரை விடுவது வாடிக்கையான ஒன்றுதான் மக்கள் எதையும் சிந்திகாமல் செயல்படுவது வேதனையானது வெக்கக்கேடான செயல். இந்த பலக்கத்தை மாற்றினால் நல்லது. ஆபத்தை விலை கொடுத்து வாங்காதீர்...சோ.ஞானசேகர்.
No comments:
Post a Comment