Friday, February 20, 2009

"கருப்பு கோட்டும் காக்கி சட்டையும் சட்டமும் தடியும்"

பிப்ரவரி, 19 வியாழக்கிழமை மாலை சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் நடந்த காட்டு மிராண்டித் தனங்கள். மக்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறையும் சட்டத்தை காக்க வேண்டிய நீதித் துறையும் அரக்க தனமாக நடந்து கொண்டது. நாம் எங்கு இருக்கிறோம் தமிழ் நாட்டிலா அல்லது வேறு எங்கு என்று தெரியவில்லை. ரவுடியை விட கேவலமாக நடந்து கொண்ட போலிஸார், வழக்கறிஞர்கள். தலைமை நீதிபதியே தாக்கப்படுதல்... இவர்கள் இப்படி நடக்கும் போது மக்கள் இவர்களை எவ்வாறு அனுகுவது அரசு இதற்க்கு என்ன பதில் இருக்கவே இருக்கிறது நமக்கு கவிதை வடிவில் பதில்..........

Friday, February 13, 2009

தாய்

உலகிலேயே மிகச் சிறந்தவள் தாய். சந்நியாசம் வாங்கி மிகப் பெரிய மகான் ஆன மகனை, தந்தை வணங்கலாம். மகனும் ஆசிர்வாதம் பண்ணலாம் ஆனால் எவ்வளவு பெரிய மகான் ஆனாலும் அவர் தன் தாயை வணங்க வேண்டும். தந்தை இறந்தால் கூட துறவத்தை கலைந்து விட்டு ஈமக் கடன்களை செய்ய வேண்டியதில்லை. ஆனைல் தாய் இறந்தால் கண்டிப்பாக துறவறத்தை கலைந்து விட்டு வெள்ளை ஆடை உடுத்தி ஈமக் கடன்களை செய்ய வேண்டும். அந்த அளவிற்க்கு தாய் உயர்ந்தவள்.

Tuesday, February 10, 2009

நில மங்கை

நிலம் அதிர நடக்கும்
மங்கை கண்டு
நில மடந்தை
வெக்கப் படுகிறாள்.

Monday, February 9, 2009

உறுதிமொழி

உறுதிமொழி

1.யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

2.யாருக்கும் கஷ்டத்தைக் கொடுக்கமாட்டேன்.

3.யாருக்கும் கெட்டதை சொல்ல மாட்டேன்.

4.நன்றாக இருப்பவத்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டேன்.

5.மற்றவர்களைக் கிண்டலாகப் பேசி, மற்றவர்ள் தவருகளை பெரிதாக்கி, வீண் அரட்டை அடிக்க மாட்டேன்.

6.தவறான வழியில் வரும் பணத்துக்கு ஆசைப்பட மாட்டேன்.

7.எந்த தவறான வழிக்கும் போக மாட்டேன்.

8.என் வேலையை ஒழுங்காக செய்வேன்.

9.என் வேலையை உண்மையாகச் செய்வேன்.

10.வேலை செய்யும் போது அநாவசியமாக அடிக்கடி பேசமாட்டேன்.

11.ரெம்ப அவசியம் இருந்தால் மட்டுமே பொய் பேசுவேன்.சாதரண விஷயத்துக்கெல்லாம் பொய் பேசமாட்டேன்.

12.அம்மா அப்பாவிற்க்கு மரியாதை கொடுப்பேன்.

13.வயதில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பேன்.

14.இன்றைக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி மற்றவர்களுக்கு செய்வேன்.

15.கடவுளை வணங்கிக் கொம்டு இதையெல்லாம் சொலலி விட்டு அதன் படி நடக்கவில்லை என்றால் அதற்கும் பெரிய தண்டணை பின்னால் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால் கடவுளிடம் தண்டனை வாங்க மாட்டேன், சென்னபடி நடப்பேன்.

மேலே எழுதியுள்ள உறுதிமொழியை வீட்டில் கடவுளின் படத்திற்கு முன்னால் நின்று கொண்டு படிப்பது மிகுந்த நன்மையைக் கொடுக்கும்.

எங்கள் ஊர்

 எங்கள் ஊர் கூவலப்புரம் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உள்ளது டி.கல்லுப்பட்டி பஞ்சாயத்து யூனியனில் உள்ளது. மேற்க்கு தொடர்ச்சி மலை சதுரகிரி அடிவாரத்தில் உள்ளது.
  எல்லா ஊர்களுக்கும் ஒரு கோயில் தான் இருக்கும் ஆனால் எங்கள் ஊர் கோயில்கள் நிறைந்த ஒரு சிறிய அழகிய கிராமம். அனைவரும் விவசாய குடும்பம். இங்கு மொத்தம் மக்கள் 500 நபர்கள் இருப்பார்கள். எங்க ஊரில் இருந்து மதுரை 40 கி.மி. இராசபாளையம் 30 கி.மி. பேரையூர் 8.கி.மி. டி.கல்லுப்பட்டி 16 கி.மி. முன்பு நாங்கள் படித்துக் கொண்டு இருக்கும் போது பஸ் வடதி கிடையாது நடந்து செல்ல வேண்டும் அல்லது சைக்கிளிள் செல்ல வேண்டும் இங்கு ஆரம்ப பாடசாலை 1 முதல் 8 வரை வகுப்புகள் உண்டு.     அதற்க்கு மேல் படிக்க பேரையூர் அல்லது டி.கல்லுப்பட்டி போக வேண்டும்.        
  வெளியில் சென்று ஊருக்குள் நுழைந்வுடன் முதலில் தெப்பக்குளம் இருக்கும் அதில் கை, கால் அலம்பிக் கொண்டு தான் வீட்டுக் செல்வார்கள். அடுத்து சுந்தரமூர்த்தி கோயில் மடம். இந்தமடம் எந்த நூற்றாண்டு கோவில் என்று பெரியவங்களுக்கும் தெரியவில்லை. மிகவும் பழைமையானவை முன்பு கூவலப்புரம் சாமியார் மடம் என்று கூறப்பட்டது இப்போது ரெட்டியார் ஜனசங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில் 
Koovalapuram (Sundaramoorthy Temple)
கூவலப்புரம் சுந்தரமூர்த்தி கோயில் மண்டப சிலைகள்
  கோவில் கொடிமரம் அண்ணக்கொடி கட்டியிருக்கும். ஆடி மாதம் ஆடி அமாவாசைக்கு மூன்று நாள் அண்ணதானம் நடைபெரும் மற்ற நாட்கள் வழிப்போக்கர்களுக்கு சாப்பாடு போடப்படும். இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.மேலும் ஆடி அமாவாசைக்கு சதுரகிரி மகாலிங்கம் கோவில்க்கு போவோர் இங்கு வந்து சுந்தரமூர்த்தியை தரிசித்து செல்ல வேண்டும் என்று ஒரு ஐதீகம் பெரியவர்கள் சொல்லக் கேள்வி.
  ஊருக்கு மேற்க்கே கருப்பசாமி கோவில் உள்ளது அதை கோவில் தோப்பு என்று சொல்வார்கள். அங்கு பஞ்ச பாண்டவர் வணவாசம் செய்யும் போது இங்கு தங்கி சென்றார்கள் என்று ஐதீகம் பஞ்ச பாண்டவர் கோவில் உள்ளது. கண்மாயின் உள்ளே அண்ணாமலை ஈஸ்வரன் கோயில் உள்ளது அதன் கரையில் முனிஸ்வரன் கோயில் உள்ளது. விவசாயம் கண்மாயில் தண்ணீர் இருந்தால் விவசாயம் நன்றாக நடக்கும்.அனைவரும் விவசாயக் குடும்பம்தான். இப்பொளுது பல துறைகளில் இருக்கிரார்கள்.
  இன்னும் நிறைய இருக்கு நாம் பேசலாம். மண்ணும்.... மனமும்.... ஞானசேகர்

Wednesday, February 4, 2009

என்னைப் பற்றி

வணக்கம் !
உங்களோட பேசுறதுல ரொம்ப மகிழ்ட்சி.
நான் பக்கா மதுரக்காரன்,
நேரம் கிடைகிரப்ப உங்கள்ட பேசுறேன்.
வருட்டுங்களா ?
அன்புடன்

-ஞானசேகர்