Friday, May 23, 2014

ஹம்மிங் பறவை


உலகிலேயே மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பறவை கடல் கடந்து பறந்து செல்லும் என்று சொன்னால் உங்களுக்குச் சந்தேகம் தோன்றலாம்.
 ஆனால் அது உண்மைதான். அமெரிக்காவில் காணப்படுகின்ற சிவப்புக் கழுத்து ஹம்மிங் பறவைகள் தான் மிக அதிகமான தொலைவு பறந்து செல்கின்றன. அமெரிக்காவில் பனிக்காலம் ஆரம்பித்தவுடன் இவை கூட்டமாக மெக்ஸிகோவிற்கும், கியூபாவிற்குமெல்லாம் பறந்து போகும். 
 800 முதல் 3,200 கிலோ மீட்டர் தூரம் வரை இவை பறந்து செல்கின்றன என்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்கள். கடல் கடந்து பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இவை பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பு மிக அதிகமாக உணவு உண்ணத் தொடங்கும். 
 இந்த உணவைக் கொழுப்பு வடிவில் தங்கள் உடலில் சேகரித்து வைப்பது தான் ஹம்மிங் பறவைகளின் சிறப்புத் தன்மை. 
 வெகு தொலைவு பறப்பதற்கான சக்தி கிடைப்பதற்காக இந்தக் கொழுப்பைத்தான் இவை பயன்படுத்துகின்றன. இப்படி வலசை போகின்ற பறவைகள் அமெரிக்காவில் பனிக்காலம் முடியும்போது சற்றும் வழி தவறாமல் அவ்வளவு தூரத்தையும் கடந்து தங்கள் சொந்த இடத்திற்குத் திரும்பி வருகின்றன. 

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

ஆப்ரிகாட் பழம்

அதிக சத்து நிறைந்த, அதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழங்கள் (Apricot Fruits - த‌மி‌ழி‌ல் ச‌ர்‌க்கரை பாதா‌மி எ‌ன்று அ‌றிய‌ப்படு‌கிறது), பொன்னிறமான மேல்தோலையும், ஒருவிதமான புளிப்பு சுவையும் உடைய எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளன. 
 இது புருனஸ் ஆர்மெனியேகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறிய மரங்களின் நன்கு பழுத்த ஆரஞ்சு நிறபழங்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. 
 பித்தப்பையில் உள்ள கற்களைப் போக்குவதிலும், குடல் புழுக்களை அழிப்பதிலும் ஆப்ரிகாட் பழங்களின் பணி மகத்தானது.
தோல் நோய்களை நீக்கும்:
 இதில் அடங்கியுள்ள ஏராளமான தாதுப் பொருட்கள் ஆஸ்துமா, மார்புச்சளி, காசநோய் மற்றும் இரத்த சோகையைக் குணப்படுத்தவல்லவை. இதில் அடங்கியுள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்குகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ முகப்பருவினை நீக்குவதிலும், தோல் தொடர்பான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
நரம்புகளை வலுப்படுத்தும்:
 பழங்களிலுள்ள வானிலிக் அமிலங்கள் மற்றும் ரூப்பின் என்ற நறுமண எண்ணெய் கை, கால் வலியை நீக்குகிறது. 
 இதில் இரும்புச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் ரத்த உற்பத்திக்கு ஏற்றது. இதில் உள்ள கரோட்டினாய்டுகள் எல்.டி.எல், என்னும் கெட்ட கொழுப்பை நீக்கி, இதய நோயை தடுக்கின்றது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது. லைகோபின் என்னும் சத்தானது செல் முதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள டிரிப்டோபேன்கள் நரம்புகளை வலுப்படுத்துகின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி:
 மிகவும் சத்து நிறைந்த ஆப்ரிகாட் பழம் குழந்தைகளுக்கு ஏற்றது. இருதய நோய், சில வகை புற்றுநோயை கூட எதிர்த்து போராடும் சத்துக்கள் அடங்கிய பழம் இது. ஆப்ரிகாட்டை நன்கு கழுவி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவோ அல்லது நறுக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து மசித்துக் கொள்ளலாம். 
 பின்னர் பாலில் ஓட்ஸ், சர்க்கரை கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்து கெட்டியானதும், தீயை அணைத்து ஆறவிடவும். ஆறியதும் ஆப்ரிகாட் மசித்ததையும் ஓட்ஸையும் கலந்து குழந்தைக்கு ஊட்டவும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
 கண்பார்வை தெளிவாகும்:
வைட்டமின் ஏ பார்வை திறனை அதிகப்படுத்துகிறது. தினமும் 2 ஆப்ரிகாட் என்ற துருக்கி ஆரஞ்சுப் பழங்களை இரவில் சாப்பிட்டு வர பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேருவதுடன் செல் அழிவும், கட்டுப்படுத்தப்படும். 
 மலை வாழைப்பழம் 1, ஆப்ரிகாட் 4 ஆகியவற்றை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தயிர் அரை கோப்பை கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுக்கும் பொழுது சாப்பிட்டு வர பார்வைதிறன் அதிகரிப்பதுடன் தோல் மினுமினுப்பு உண்டாகும். 

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...
மரம் வளர்த்து புவி காப்போம்....

Thursday, May 15, 2014

பெங்குயின்

 பறக்க முடியாத பறவை இனம் பெங்குயின். அவை தங்கள் சிறகுகளைத் துடுப்புகளாகத் தகவமைத்துக் கொண்டவை. நீரில் நீந்துவதற்கு துடுப்புகளைப் பயன்படுத்தும்.

 பூமியின் தென் அரைக்கோளப் பகுதியிலும், வடக்கே கலப்பகோஸ் தீவுகளிலும் பெங்குயின்கள் அதிகமாக வாழ்கின்றன. உணவுக்காக பூமத்திய ரேகையையும் கடந்து செல்வதுண்டு. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

 பெங்குயின்களின் முக்கிய உணவு மீன்கள்.

 பெங்குயின் வகைகளில் மிகப் பெரியது சக்கரவர்த்தி பெங்குயின் எனப்படும் ‘எம்பரர் பெங்குயின்’. ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரமும் 35 கிலோகிராம் எடையும் உள்ளவை.

 பெங்குயின்களில் சிறியது, நீலப் பெங்குயின். இதன் உயரம் 40 சென்டிமீட்டர். ஒரு கிலோகிராம் எடை.

 கடல் நீரைக் குடித்து பெங்குயின்களால் வாழமுடியும்.

 வாழ்நாளின் பாதியை நீரிலும், பாதியை நிலத்திலும் செலவழிக்கின்றன.

 பொதுவாகப் பெரிய பென்குயின்கள், வெப்பத்தை உடலில் தக்கவைக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. அதனால் அதிக குளிர்ப் பகுதிகளிலும் அவற்றால் வாழமுடியும். சிறிய பெங்குயின்களால் அதிக குளிர் நிலவும் பகுதிகளில் வாழமுடியாது.

 நியூசிலாந்தைச் சேர்ந்த மஞ்சள் கண் பெங்குயின்கள் அரிதாகி வருகின்றன. தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 4000 மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 பெங்குயினின் கறுப்பு முதுகும், வெள்ளை வயிறும் நீந்தும்போது குழப்பத்தை ஏற்படுத்தும். அவை நீந்தும்போது, மேலிருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாது. தண்ணீருக்குக் கீழே இருந்து, சூரிய ஒளி பிரதிபலித்து அதன் வெள்ளை வயிறை மறைத்து விடும்.

 பெங்குயின்களுக்கு அன்டார்டிகா கண்டத்தில் ஆபத்து கிடையாது. ஏனெனில் அங்கு பெங்குயின்களை வேட்டையாடும் விலங்குகள் கிடையாது.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

Tuesday, May 13, 2014

மிளகாய்

 


மிளகாய் நல்லதா? கெட்டதா? அதிக காரம் சாப்பிட்டால் அல்சர் வருமா? அதிக மிளகாய் சேர்த்த உணவு சூட்டைக் கிளப்புமா? இப்படி மிளகாயைப் பற்றிப் பரவலாக பலருக்கும் பல கேள்விகள்... 
  எந்த சமையலுக்கும் சுவைகூட்டும் முக்கியப் பொருளான மிளகாயில், நல்லதும் கெட்டதுமான அம்சங்கள் இணைந்தே இருக்கின்றன என்பதே உண்மை.பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், குடைமிளகாய் என மிளகாயில் பல வகைகள் உள்ளன. எல்லா மிளகாய்க்கும் குணங்கள் ஒன்றே. ஒரே ஒரு வித்தியாசம்... காய்ந்த மிளகாயில் மட்டும் கலோரியும், வைட்டமின் ஏ சத்தும் மற்றதைவிட சற்றே அதிகம்.
  கொழுப்புச் சத்தோ, உப்புச் சத்தோ இல்லை என்பதால் இதய நோயாளிகளுக்கும், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிளகாய் கொடுக்கலாம். தவறில்லை. எடைக் குறைக்கிற முயற்சியில் இருப்பவர்களுக்கு மற்றவர்களைப் போல எல்லா உணவுகளையும் சாப்பிட முடியாது. எந்த உணவையும் சுவைபட மாற்ற, அவர்கள் மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம்.
  நார்ச்சத்து அதிகமுள்ளதால், எடைக் குறைப்புக்கும், நீரிழிவுக்கும், இதய நோய்களுக்கும்கூட மிளகாய் நல்லது. காய்ந்த மிளகாயிலும் பச்சை மிளகாயிலும் பீட்டா கரோட்டின் என்கிற வைட்டமின் ஏ சத்தானது அதிகம். அதனால், விழித் திரையின் நிறமியை அதிகரிக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும் மிளகாய் மறைமுகமாக உதவுகிறது.
 வைட்டமின் சி சத்தும் அதிகம். அதனால் ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாக செயல்படுகிறது. மிளகாயில் ஃபைட்டோகெமிக்கல் அதிகம். சிணீஜீsணீவீநீவீஸீ என்கிற நிறமிதான் மிளகாயின் காரசார ருசிக்குக் காரணம். இந்த நிறமி அதிகமானால் மிளகாயில் காரம் அதிகரிக்கும். குறைந்தால் காரமும் குறையும்.
  நரம்புப் பிரச்னை உள்ளவர்களுக்கும், சொரியாசிஸ் என்கிற சரும நோய் உள்ளவர்களுக்கும் மிளகாய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
  மிளகாயில் உள்ளதாகச் சொன்ன Capsaicin பொருளானது, நம் உடலில் தோன்றும் வலியானது சருமத்திலிருந்து தண்டுவடத்துக்குப் போகாமல் காக்கிறது. அப்படி தண்டுவடத்துக்கு வலி இடம் பெயர்ந்தால், அது மூளையில் உணரப்படும். அடிபட்டவர்களுக்கும், வெட்டுக்காயம் பட்டவர்களுக்கும் காரமான உணவு கொடுக்கச் சொல்வதன் பின்னணி இதுதான்.மிளகாய் எடுத்துக் கொள்வதால், என்டார்ஃபின் எனப்படுகிற ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது.
  அதனால் ஒருவித ஓய்வான மனநிலை கிடைக்கிறது. இரவு காரசாரமான உணவு எடுத்துக் கொண்டால், காலையில் மிகவும் ஓய்வாக எழுந்ததாக உணர்வது இதனால்தான். தவிர மிளகாய் சேர்த்த உணவு, குடலை சுத்தப் படுத்தி, உடலை லேசாக்கி விடும். இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தாலும், மிளகாயை அளவோடுதான் எடுக்க வேண்டும். சிலர் அதிக மசாலா, காரம் சேர்த்த உணவுகளை மட்டுமே எப்போதும் சாப்பிடுவார்கள். 
  அப்படி சாப்பிட்டால் குடல் பிரச்னை, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்னை, மூலநோய் போன்றவை வரலாம். மிகவும் காரமான உணவு உண்ணும் போது, அந்தக் காரத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்த மிதமான உணவுகளையும் எடுக்க வேண்டும். அதனால்தான் தயிர்சாதம் - ஊறுகாய் போன்ற காம்பினேஷன்களை நம் முன்னோர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்!
  வயிற்றுப்புண் இருப்பவர்களும், அமிலச் சுரப்பு பிரச்னை உள்ளவர்களும் மிளகாயை எடுத்துக் கொண்டால் பிரச்னை தீவிரமடையும். குடைமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம். அது புற்றுநோய்க்கு எதிராக போராடக் கூடியது என்பது உண்மை. ஆனாலும், அதையும் பச்சையாகவோ, அதிகமாகவோ எடுக்க வேண்டாம்.

என்ன இருக்கிறது? 100 கிராமில்...

                    காய்ந்த மிளகாய்             பச்சை மிளகாய்                 குடை மிளகாய்

ஆற்றல்        246 கிலோ கலோரி         29 கிலோ கலோரி        24 கிலோ கலோரி
புரதம்            15.9 கிராம்                             2.9 கிராம்                          1.3 கிராம்
கொழுப்பு      6.2 கிராம்                             0.6 கிராம்                           0.3 கிராம்
நார்ச்சத்து   30.3 கிராம்                           6.8 கிராம்                            1.0 கிராம்
இரும்பு        2.3 கிராம்                              4.4 கிராம்                            0.567 கிராம்
கால்சியம்               160 மி.கி.                   30 மி.கி.                               10 மி.கி.
வைட்டமின் சி    50 மி.கி.                     111 மி.கி.                               37 மி.கி.
வைட்டமின் ஏ    345 மியூஜி*          75 மியூஜி                                   427 மியூஜி

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்......

Monday, April 21, 2014

பசுமை பூங்கா

 
நகரப்புறங்களில் பசுமையான செடி கொடிகளும், தோட்டங்களும், பூங்காக்களும் அதிகம் இருந்தால் அதன் மூலம் அந்த நகரங்களில் வசிக்கும் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
  செடிகொடிகளால் மன அழுத்தம், கோபம் மற்றும் மன உளைச்சல் போன்றவை குறைகிறது மரணத்துக்கு காரணமான நான்காவது பெரிய காரனமாக இருப்பது போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது தான்  ஆகவே அதிக அளவில் நகர்ப்புறங்களில் தோட்டங்கள் அமைத்தால் அவற்றில் மனிதர்கள் உடற்பயிற்சி செய்யலாம். 
  பசுமையான தோட்டங்கள், பூங்காக்கள் போன்றவை நகரப்புறங்களில் இருந்தால் அவற்றால் ஏராளமான நன்மைகள் மனிதர்களுக்கு ஏற்படும்.
மருத்துவமனைகளில் பசுமையான தோட்டங்களை அமைப்பதால், நோயாளிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பணியாளர்கள் இடையே பெருமளவு மன அழுத்தம் குறையும்.
  ஆனால் தோட்டங்களில் விதவிதமான செடிகள் இருப்பது அவசியம். மேலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பசுமையான தோட்டங்களை பார்ப்பதாலு, பறவைகளின் சத்தத்தைகேப்பதாலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வரும் படபடப்பு போன்றவை குறைவதால், அவர்களுக்கு     தேவைப்படும் மருந்தின் தேவையும் குறையும்.
  அதே போன்று தோட்டத்தில் வேலை செய்வதால் உடல் இலகுவாகிறது, மேலும் தடுமாற்றம் இல்லாமல் நடக்க முடிகிறது, இதனால் தனியாக வீட்டில் இருக்கும் வயதானவர்கள் தடுமாறி வீட்டிற்குள் விழுந்து விடுவது குறைகிறது.
  சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், சூரிய ஒளி உடலில் பட்டால், அதனால் ரத்தக் கொதிப்பு குறைவது தெரிய வந்துள்ளது.
இவ்வளவு நன்மை உடைய பசுமை பூங்காக்களையும், தோட்டங்களையும் அமைத்தால் அது சுகாதாரத்துறைக்காக அரசு செலவிடும் தொகை ஏராளமாக குறையவாய்ப்பு இருக்கிறது.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

காய்கனி

ஆரோக்கிய உடலுக்குத் தேவை அன்றாடம் அரைகிலோ காய்கனி
அன்றாட உணவில் காய், கனிகளின் அளவே ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும்
 மனித உடல் ஆரோக்கியத்திற்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும். அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் உண்பது அவசியம்.
 இதுநாள்வரை ஒரு 25 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவுக்காவது காய்கறி மற்றும் பழங்களை உண்ணவேண்டும். ஆனால் தற்போது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரைகிலோவுக்கும் அதிகமாக காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவது தான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதுடன் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் இந்த காய்கறி மற்றும் பழங்கள் கொடுக்கும்.
 இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரைகிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல்வேறு வகையான காய்கறிகளையும் பழங்களையும் கலந்து சாப்பிடுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும் அதன்மூலமே மனித உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் மனித உடலுக்கு கிடைக்கும்.
 இந்த காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறியாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த வெளிநாட்டு ஆப்பிள் பழங்களாகவோதான் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற விலைகுறைந்த காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும்.பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவற்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற விலை சகாயமாக கிடைக்கும் பழங்களிலும் கூட நல்ல பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரைகிலோ காய்கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

Monday, April 7, 2014

வாழைப்பூ

 
 ஊதா மொட்டுகளுடன் குழாய் போன்ற அமைப்பில் தோன்றும் வாழைப்பூவின் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் பூக்களை ஊறிந்தால் தேன்  போன்ற திரவம் இருக்கும். வாழைப்பூவில் வைட்டமின் ஈ மற்றும் ஃபிளாவனாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. வாழைப்பூவில் புரதங்கள் மற்றும்  நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. பலரும் வாழைப்பூவை உணவுக்காக பயன்படுத்துகின்றனர். இது நிறைய மருத்துவ பலன்களை  கொண்டுள்ளது எனினும் விஞ்ஞானரீதியாக எந்த ஒரு தவலும் இல்லை. ஆனாலும் இயற்கை மருத்துவத்தில் வாழைப்பூ பக்க விளைவுகளுக்கு  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
நோய் தொற்று:  
  எத்தனால் நோய் தொற்று காரணமாக உருவாகும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை வாழைப்பூக்களின் சாறுகள் மூலம் தடுக்கலாம்.. வாழைப்பூவில்  பேசில்லஸ் சப்ஸ்டில்ஸ், பேசில்லஸ் க்ரியூஸ் ஈஸ்செர்ச்சியா கோலி போன்றவைகளை கொண்டுள்ளதால் காயங்களை ஆற்றுவதற்கும் நோய்  தொற்று, அலர்ஜி என அனைத்திற்கும் இது பயன்படுகிறது.
மாதவிடாய் இரத்தப்போக்கு
  வீட்டு வைத்தியத்தில் சிறந்தது வாழைப்பூ. மாதவிடாய் கோளாறால் அவதிபடுபவர்களுக்கு வாழைப்பூ உதவுகிறது. ஒரு கப் சமைத்த வாழைப்பூவுடன்  ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாயின் போது அதிக ரத்த போக்கு ஏற்படாமல் பாதுகாக்கிறது. சமைத்த வாழைப்பூவுடன் தயிர்  சேர்த்து சாப்பிடுவதால் உடலில் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிக்கிறது. அதன் மூலம் மிகையான மாதவிடாய் தொடர்புடைய இரத்தப்போக்கு  குறைக்கிறது. பொதுவாக மாதவிடய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறது.
 நீரிழிவு நோய்
  வாழைப்பூவை தினமும் நாள் ஒன்றுக்கு 0.15 முதல் 0.25 கிராம் என வேகவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஆண்டிமைக்ரோபயசின் செயல்பாடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் என  மருத்துவரீதியாக நிரூபிக்கபடவில்லை.  இது வீட்டு மருத்துவத்தில் மட்டுமே பயன்படுத்தபடுகிறது.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

சுரைக்காய்

 சுரைக்காய் என்றால் பலரும் இதில் என்ன சத்துகள் இருக்க போகிறது என்றே நினைத்து கொள்கிறார்கள். அப்படி நினைப்பவராக இருந்தால்  சுரைக்காயின் பயன்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்ச்த்து 96.07 %, இரும்புச்  சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் 0.2%, புரதம் 0.3%, கார்போஹைட்ரேட் 2.3% போன்ற சத்துகளை கொண்டுள்ளது சுரைக்காய்.
  சிறுநீரக கோளாறுகளுக்கு: சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக  கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
  மலச்சிக்கள், அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும்  நாவறட்சியை போக்கும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும்.  உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம்.
  நீரிழிவு நோய்: நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி தாகம் ஏற்பட்டு உடல் எடையும் குறையும். இதை தவிர்க்க சுரைக்காயின் சதைப்பகுதியை  சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சாம்பாரிலிட்டு சாப்பிட்டு வந்தால் தாகம் அடங்கும். மேலும் நீரிழிவு உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி  வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.
  தலைவலி நீங்க: வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
  உறக்கத்திற்கு: இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிபடுபவர்கள் சுரைக்காயின் சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து தலைமுடியில் தடவி மஜாஜ்  செய்து வர தூக்கம் கண்களை தழுவும்.
  ஆண்மை பெருகுவதற்கு: சுரைக்காய் மற்றும் அதன் விதைகளுக்கு ஆண்மையை பெருக்கும் சக்தி உண்டு. சுரைக்காயின் சதைப் பகுதியுடன்  விதைகளையும் சேர்த்து சர்க்கரையுடன் கலந்து ஒரு மாதம் உண்டு  வந்தால் பலன் கிடைக்கும்.
   அசதியை போக்க: உடல் சோர்வு உள்ளவர்கள் சுரைக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொண்டால் அசதி, சோர்வு நீக்கி விடும். நீர்சத்து அதிகம்  கொண்டிருப்பதால் கர்ப்பிணிபெண்கள் இதை சமைத்து சாப்பிட்டால் உடல் வீக்கம் குறையும். தேவையற்ற தண்ணீர் சிறுநீர் வழியாக வெளியேறும்.

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...

ஆவாரம் பூ

 
இன்று நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேவருகிறது. 40 வயதைக் கடந்தவர்கள் முக்கால் வாசிப் பேர் நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளானவர்களாக உள்ளனர்.நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்தை சக்தியாக மாற்றுவதற்கு கணையத்திலிருந்து கணைய நீர் அதாவது இன்சுலின் சுரக்கிறது. அவ்வாறு கணைய நீர் சீராக சுரந்து சக்தியாக மாற்றாமல் அது சர்க்கரைச் சத்தாகவே ரத்தத்துடன் கலப்பதால்  இரத்தத்தில்  சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உருவாகிறது.
  மேலும் உடல் உழைப்பு இன்மை, மன அழுத்தம், உடலுக்கு சீரான சத்துக்களைக் கொண்ட உணவு இல்லாமை, பரம்பரையாக வரும் நீரிழிவு போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நீரிழிவு நோயின் தன்மை வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு தகுந்தவாறு பாதிப்பை உண்டு பண்ணும். நீரிழிவு நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்கிறது  நவீன மருத்துவ உலகம். ஆனால் முறையான உணவு முறையாலும், உடற் பயிற்சியாலும்  நம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் என்கிறது  மருத்துவம்.
  சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும்,  அந்த நோயினால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.  பொதுவாக  சர்க்கரை நோயின் பாதிப்பானது மயக்கம், உடல் தளர்வு, கை கால் சோர்வு, ஞாபக மறதி, கண் பார்வைக் குறைபாடு என பல குறிகுணங்கள் இருந்தால், இரத்தப் பரிசோதனை மூலம் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்து, ஆரம்ப காலத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, தியானம், உடற் பயிற்சி, போன்றவற்றால் கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
  பொன்னாவரை பூ பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி. இது சர்க்கரை நோயை குணப்படுத்த மருந்தாகப் பயன்படுகிறது. பொன்னாவாரை பூ 10 கிராம், மிளகு 5, திப்பிலி3, சுக்கு1 துண்டு, சிற்றரத்தை 1 துண்டு, இவற்றை இடித்து பொடியாக்கி ஒரு தம்ளர் நீரில் போட்டு பாதியாக வற்றக் காய்ச்சி காலை வேளையில் அருந்தினால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதுடன், கை கால் மறமறப்பு, உடல் சோர்வு, மயக்கம், படபடப்பு, கண் பார்வைக் கோளாறு முதலியவை படிப்படியாகக் குறையும்.
  பொன்னாவாரைப் பூவை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். உடலின் வியர்வை நாற்றமும் மாறும். பொன்னாவாரைப் பூவுடன் பச்சை பயறு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் சர்க்கரை நோயினால் முழங்காலுக்குக் கீழே உண்டான சரும கருப்பு நீங்கி சருமம் பழைய நிலையை அடையும். உடல் எரிச்சல் தீரும்

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பூ, பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

‘வில்வம்மரம்’

   
 இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில்  போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக  பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக  பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம்.
  இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை  கொண்டவை. வேர் கசப்பானது.   இதன் வேர், இலை, பழம் என அனைத்தும் மருந்தாக  பயன்படுகிறது. இந்த தாவரம் சில நோய்களை முற்றிலும் நீக்குவதோடு, நோய் வராமலும் தடுக்கிறது.
  வில்வ மரத்தின் பாகங்கள் காய்ச்சல், ரத்தசோகை, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்கு சிறந்தது. சிறந்த காலரா தடுப்பு மருந்தாகவும் இது  செயல்படுகிறது. வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்து வர கழிச்சல், மூலநோய் நிற்கும். இலையை  இடித்து பிழிந்த சாற்றில் பசுவின் பால் விட்டு கொடுத்தால் சோகை, வீக்கம் போகும். 
  வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியம். ஆண்மை அளிக்கும். வில்வ வேர் பட்டையை பச்சையாக 10 கிராம் எடுத்து ஒரு கிராம்  சீரகத்துடன் அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து கலக்கி வடிகட்டி காலையில் மட்டும் குடித்து வந்தால் தாது பலப்படும். இதன் மூன்று இலைகளை  சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட் செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். நல்ல ஜீரணம் உண்டாகும். நாம் உண்ணும்  உணவு பொருட்களிலுள்ள சத்துக்கள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து வலுப்பெற செய்கிறது. 
  வேர், பட்டை, இலை ஆகியவற்றில் எதையாவது ஒன்றை சாறு பிழிந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கல்யாணமுருங்கை சாறு அதே அளவு  எடுத்து கலந்து காலையில் குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். இதுபோல் இதன் காய் தூளை சிறிது வெல்லத்துடன் சேர்த்து உண்டால்  ரத்தத்தில் உள்ள அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். 
  வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை சாப்பிட்டால்  சீதபேதி, பசியின்மை குணமாகும். 2, 3 பச்சை இலைகளை தினந்தோறும் காலையில் தின்று வர நீரிழிவு, ஆஸ்துமா நோய்கள் கட்டுப்படுகிறது,  கோழைகட்டாது. வேர்ப்பட்டையை கசாயம் செய்து குடித்து வர காய்ச்சல் தணிகிறது. பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத்  செய்து குடித்து வர உடலில் வெப்பம் தணியும்.  இதனால் அதிக வேர்வை ஏற்படுவது குறைகிறது. மலச்சிக்கல் வராது. 
  வில்வ மரத்தின் பட்டை மற்றும் பிசின் பல்வேறு நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. மிகச்சிறந்த மூலிகை மரமான  வில்வம் தற்போது சாதாரண இடங்களில் காண்பது அரிதாகிவிட்டது. இது தானாக வளர்வது அரிது. விதைகளை நடவு செய்து தான் வளர்க்க  வேண்டும். பண்டைய காலத்தில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வந்த இந்த மரம் தற்போது சிவன் கோயில்கள் மற்றும் சில மூலிகை பண்ணைகளில்  மட்டுமே உள்ளன. இதன் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் இம்மரம் கைவிடப்பட்டாலும், ஆன்மிக காரணங்களுக்காக  பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நோய்களை எளிதாக குணப்படுத்தும் வில்வ மரத்தை அழிவு பட்டியலில் இருந்து மீட்டு அனைத்து இடங்களிலும்  வளரச்செய்ய வேண்டும்.
இரண்டு வேளைக்கு மேல் மூலிகைசாறு வேண்டாம்
  வில்வம், அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை,  மஞ்சள்கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை இவற்றில் ஏதாவது ஒரு இலையில் ஒரு கைப்பிடி  அளவு எடுத்து கழுவி மிக்ஸியில் போட்டு 1 டம்பளர் (250 மில்லி) தண்ணீர் விட்டு சட்டினி போல் அரைத்து அதை சுத்தமான வெள்ளை துணியில்  ஊற்றி பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். தேவையான அளவு வெல்லம் அல்லது தேன் சேர்த்து குடிக்கலாம். சில இலைகள் சில நோய்களை  முற்றிலும் குணப்படுத்தும். காலை, மாலை என இரண்டு வேளைக்கு மேல் மூலிகை சாறு குடிக்க கூடாது. நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு நம்  கையில் தான் உள்ளது.
மூலிகை சூப்
  வில்வ இலை அல்லது மற்ற மூலிகை இலைகளை சாறு எடுத்து பச்சையாக சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் கீரையுடன் சேர்த்து சமைத்து  சாப்பிடலாம் அல்லது மூலிகை சூப் தயாரித்தும் சாப்பிடலாம். இந்த சாறு ஒருவருக்கு ஒரு நேரத்திற்கு போதுமானது.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

Thursday, January 23, 2014

ஆப்ரிக்க சிங்கம்

அழிவின் விளிம்பில் மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள்
 மேற்கு ஆப்ரிக்க சிங்கம்

மேற்கு ஆப்ரிக்காவுக்கே உரிய பிரத்யேகமான சிங்கங்கள் இன்றைய நிலையில் அங்கே வெறும் 400 மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நிலைமை இப்படியே போனால், இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் விரைவில் அழிந்துவிடும் என்றும் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்திருக்கிறது.
பந்த்தேரா என்கிற தன்னார்வ அமைப்பு மேற்கு ஆப்ரிக்கப் பிராந்தியத்தில் இருக்கும் பதினேழு நாடுகளில் தனது ஆய்வை மேற்கொண்டது.
செனகலில் துவங்கி நைஜீரியா வரையிலான 17 நாடுகளில் சுமார் ஆறு ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் இறுதி அறிக்கையில் இந்த பிராந்தியத்துக்கே பிரத்யேகமானதும், மரபணு ரீதியில் மற்ற ஆப்ரிக்க சிங்கங்களிடமிருந்து வேறுபட்டதுமான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் வரலாற்று ரீதியில் வாழ்ந்த இடங்களில் இன்று வெறும் ஒரே ஒரு சதவீத இடங்களில் மட்டுமே அவை வாழ்வதாக தெரிவித்திருக்கிறக்கிறது.
இந்த அறிக்கையை எழுதிய ஆய்வாளர்களில் ஒருவரான பிலிப் ஹென்ஸ்ஷெசெல் இது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசியபோது, சரித்திர ரீதியாக மேற்கு ஆப்ரிக்காவில் சிங்கங்கள் வாழ்ந்துவந்த அவற்றின் பாரம்பரிய வாழ்விடங்கள் 99 சதவீதம் குறைந்துள்ளது என்பது எமது ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
சிங்கங்கள் வாழ்விடங்கள் விவசாயத் தேவைகளுக்காக பெருமளவில் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டத்தே இதற்கு முக்கிய காரணம் என்றும், பருத்தி பயிர் செயவதற்காகவும், உணவுத் தேவைக்கான இதர பயிர்களுக்காவும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“கடந்த இருபது ஆண்டுகளில் பத்து நாடுகளுக்கும் மேலாக வாழ்ந்து சுற்றித்திருந்த சிங்கங்கள் இப்போது ஒரு குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட இடங்களிலேயே, அதிலும் மிகவும் ஆபத்தும் அபாயமும் நிறைந்த சூழலில் வாழ்கின்றன என்பது கவலையளிக்கும் ஒரு விஷயம்", என்றும் கூறினார் ஆய்வாளர் பிலிப் ஹென்ஷெசெல்.
மேற்கு ஆப்ரிக்க சிங்கக்குட்டி
இந்த சிங்கங்கள் இப்படி வேகமாக அழிவின் விளிம்புக்கு சென்றுகொண்டிருப்பது தமக்கு மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்த ஹென்ஷெசெல், இவை ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் சிங்கங்களில் மரபணு ரீதியில் மாறுபட்டவை என்பதால் இவற்றின் அழிவு என்பது ஒட்டுமொத்தமாக ஒருவகையான சிங்க இனமே அழிவதாகவே அர்த்தப்படும் என்று கூறினார்.
அழிவின் விளிம்பில் நிற்கும் இந்த அரியவகை மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாக்க தேவைப்படும் நிதிவசதி இங்குள்ள அரசுகளிடம் இல்லை என்பதுடன், அந்த அரசுகளுக்கு வேறுபல முன்னுரிமை விவகாரங்களும் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்களை பாதுகாப்பதற்கு சர்வதேச நிதி உதவி தேவை என்று வாதாடும் அவர், அதற்கும் முன்னதாக, இந்த மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் அழிவில் விளிம்பில் இருக்கும் அருகிவரும் விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்த கட்டமாக இந்த வகையான மேற்கு ஆப்ரிக்க சிங்கங்கள் இயற்கையாக வாழும் பிரதேசங்களை பாதுகாக்கத் தேவையான சர்வதேச நிதி உதவியையும் உலக நாடுகள் செய்யவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

சர்க்கரை ‘வெள்ளை விஷம்'

 சர்க்கரை என்ற பெயரில் மெல்லக் கொல்லும் ‘வெள்ளை விஷம்' : 
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போய் விடும்.

‘இட் இஸ் கான்....'. ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் சர்க்கரை என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். விடாத மைஅழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த சர்க்கரையை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்? என்ற நமது சிந்தனையை சர்க்கரையின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, காப்பியில் இருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையும் நமது அன்றாட உணவினூடே ஒரு ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது. 

இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

'இல்லாத ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை' என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம் பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சர்க்கரையை, ஆலைகளில் எப்படி  தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக  தெரிந்து கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.

இந்த வெள்ளை சர்க்கரையை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயன‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள ‘மாலை மலர் டாட்.காம் விரும்புகிறது.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது.

2. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது.

4. 102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர் வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது.

5. அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண், சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து, நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை குழம்பாக உருமாற்றப்படுகிறது.

7. அதன் பின்னர்,  சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது.

8. இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்.

9. தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

இதன் விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்.

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம். ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன. ...

Tuesday, December 31, 2013

இயற்கையின் இமயம்

இயற்கையின் இ(மை)மயம்
இயற்கை எய்துவிட்டது. இவரை விட இயற்கையை நேசித்தவர் மிகச்சிலரே.

இயற்கைக்கு இற்கை சுலோகங்கள் 

இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

இற்கையுடன் உயிரினங்களை வாழவிடுவோம்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள்.

சுற்றுச்சூழலைப் பதுகாப்போம்.

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

இயற்கை வளங்களை காப்போம் பறவைகளை வாழவிடுவோம்.

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்... 

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.

இயற்கை நமக்கு கொடுத்த கொடை மலை.

இயற்கையின் கொடை நதிகளை மாசுபடாமல் இருக்க உதவுவோம்.

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

இயற்கையை இயற்கையாக இருக்க விடுவோம்...

மரம் வளர்ப்போம் புவிகாப்போம்

இயற்கையின் அதிசயம் நமக்கு மகிழ்ச்சி...

இயற்கையை ரசித்து இயற்கையாக வாழவும்.

இயற்கை வனவளமே நாட்டின் வளம்...

பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! 

வனவிலங்குகளை காத்து இயற்கையை காப்போம்...

இயற்கையை காப்பது நம் கடமை...

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்... 

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

மரம் வளர்த்து மழை வளம் காப்போம்...

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

இயற்கை நமக்கு கொடை...

மரம் வளர்ப்போம் புவி காப்போம...

மரம் வளர்ப்போம் வரும் சந்ததி காப்போம்.....

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

காட்டைவளர்த்து நாட்டைக்காப்போம்...

இயற்கையை இயற்கையாக இருக்க உதவுவோம்...

இயற்கை இயல்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவோம்...

மரம் வளர்த்து புவி காப்போம்....

இயற்கை அன்னை நமக்கு அளித்த அழகு காடுகள்...

இயற்கையை ரசி அது உன்னிடம் பேசும்.... 

பசுமை நிறைந்த உலகை உருவாக்குவோம்.....

தூய்மையை இழக்காத ஒன்று இயற்கைதான்...


இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

வனவளம் காப்போம் வளமான வாழ்வு பெறுவோம்...

இயற்கையின் எழிலினை நாம் கண்டு ரசிக்கும் போது அவற்றைப் படைத்த ஆண்டவன் நம் கண்களுக்குத் தெரியாமலா போவான்?

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள். ... 

இயற்கை நமக்களித்த ஆதார ஒளி சூரியன்! 

இயற்கை எழில் கூடிய அருமையான பகுதி. ...

இயற்கையை நீ அழித்தால் இயற்கையோடு நீயும் அழிவாய்...

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

அண்டங்கள் ஆகாயங்கள் இயற்கை! வானும் விண்மீன்களும் இயற்கை! சூரியனும் ஒளியும் இயற்கை! அதைச் சுற்றிவரும் கிரகங்கள் இயற்கை! ...

இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுபடுகிறது...

இயற்கை அண்ணை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

இயற்கை நமக்கு அளித்த மகத்துவங்கள் ஏராளம்.  ஒவ்வொரு பழத்திலும் நோய்களுக்கான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளன...

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...

இயற்கை காடுகள் உயிரினங்களுக்கு பெரும் நன்மை செய்கின்றன,பெருமளவில் மனிதகுலத்திற்கு...

வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம்...

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்



Monday, December 16, 2013

மாரடைப்பைத் தடுக்கும் ஆரஞ்சு

 
 உலகில் இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு காரணமாக பலர் மரணம் அடைகிறார்கள். ரத்தத்தில் இருவகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அவை 1. எச்.டி.எல். ( எச்.டி.எல் -ஹை டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) 2. எல்.டி.எல். - (லோ டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) இதில் எச்.டி.எல் சத்து 40 மில்லி கிராம் சதவீதத்துக்குக் குறையக் கூடாது. அதே போல் எல்.டி.எல் அளவு 100 மில்லி கிராம் சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
  ரத்தத்தில் கொழுப்பு தேவைக்கு அதிகமாகச் சேருவதையும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க எச்.டி.எல். சத்து உதவுகிறது. தினமும் 2 அல்லது 3 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் எச். டி.எல். அளவு அதிகரிக்கிறது என்று டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஹெஸ்பிரிடின் என்ற சத்து காரணமாக அமைகிறது. எனவே தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை கூறியுள்ளனர்.
 (ஆதாரம்: பொது அறிவுப்பெட்டகம்.)
நன்றி : தினமணி ஞாயிறு கொண்டாட்டம்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Saturday, December 14, 2013

தவளை நண்டு

 
மன்னார் வளைகுடாவில் அரிய வகை தவளை நண்டு
 19ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் காணப்பட்ட "தவளை நண்டு' (Frog crab) என அழைக்கப்படும் அரிய வகை நண்டு இப்போது மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தூத்துக்குடி கடல் பகுதியில் ஆராய்ச்சி நடத்திவரும் மீன்வள ஆராய்ச்சியாளர் டி. வைத்தீஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உலகில் மொத்தம் 6,793 வகையான கடல் நண்டுகள் உள்ளன. குறிப்பாக, மன்னார் வளைகுடா பகுதியில் 254 வகையான நண்டுகள் உள்ளன. இதில் 24 வகையான நண்டுகள் விஷத்தன்மை கொண்டவை.
 இந்த வகை நண்டுகளிலிருந்து புற்றுநோய் உள்ளிட்ட பலவகை நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
  ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் கடல் பகுதியில் வாழக்கூடிய தவளை நண்டு, ரனிணா ரனிணா என்ற அறிவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த வகை நண்டு 19-ஆம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா பகுதியில் காணப்பட்டதாக மீன்வள ஆராய்ச்சியாளர் ஆன்டர்சன் என்பவர் 1888-ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளார்.
  இந்நிலையில், சில நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில், விசைப்படகில் பிடித்துவரப்பட்ட கலசல் எனப்படும் கோழித் தீவனத்துக்கு பயன்படுத்தக் கூடிய மீன்களுடன் இந்த அரிய வகை தவளை நண்டு காணப்பட்டது.
  4.5 செ.மீ. நீளமும், 10 கிராம் எடையும் கொண்ட இந்த வெள்ளை நிற நண்டு தூத்துக்குடி கடல் பகுதியில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் 310 மீட்டர் ஆழத்தில் பிடிபட்டுள்ளது.
  இந்த நண்டு மன்னார் வளைகுடா கடல் பகுதிக்குள் இடம் பெயர்ந்தது குறித்தும், இதன் மருத்துவ குணம் குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் மேலும் அரிய தகவல்கள் கிடைக்கும்.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்...

Saturday, November 16, 2013

சிறுதானியம் பெரும்பயன்

  நம் முன்னோர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியக் காரணமாக அமைந்தது அவர்கள் கடைப்பிடித்த உணவுப் பழக்கமேயாகும். அவர்கள் உண்ட உணவே மருந்தாகவும் இருந்ததால் நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது.
கேழ்வரகு
     ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளை அவர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.

  ஆனால் தற்போது சிறு வயதிலேயே பல்வேறு நோய்களை சந்தித்துக்கொண்டு மருந்துகளையே உணவாகப் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கமே.

  பீட்சா, பர்கர், ஹாட்டாக், ஸ்பீக் மற்றும் சீன, இத்தாலியன், மெக்சிகன் உள்ளிட்ட அயல்நாட்டு உடனடி உணவு வகைகள் மீது ஆர்வம் காட்டுவது, பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட நொறுக்கு உணவு வகைகள் போன்றவற்றை சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுவது போன்றவை முக்கிய காரணங்கள்.

கம்பு
  இவ்வகை உணவுகளில் அதிகளவிலான ரசாயன உப்பு, ரசாயன கலவைகள், செயற்கையான இனிப்பு, கொழுப்பு வகைகள் உள்ளிட்டவை கலந்துள்ளன. தினசரி உண்ணும் சாதாரண உணவிலிருந்து வேறுபட்டு எதையாவது சாப்பிட விரும்பி, மாற்று உணவுகளை தேடிப்போன மனிதன் இதய நோய், உடல் பருமன் உள்ளிட்ட நோய்களைச் சந்தித்த நிலையில் இதனை மாற்ற மீண்டும் பாரம்பரிய உணவு முறைக்கு நாம் மாற வேண்டும் என்பதே உணவு வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

  பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து, கொழுப்புச்சத்து குறையவும், உடல் பருமன் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ளவும் ஏதுவாகிறது.

சோளம்
  சிறுதானியங்கள் என்பது கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சோளம் உள்ளிட்டவை ஆகும். விலைவாசி உயர்வு, இயற்கை சூழ்நிலை மாற்றங்கள் காரணமாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதனால் சிறுதானியங்கள் பயிரிடுவது குறைந்தது. அரிசி சோற்றை மட்டுமே உண்ணத் தொடங்கிய மனிதன் இதய நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு ஆளானான். அரிசிக்கு மாற்றாக கோதுமையும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிறுதானியங்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து போனது. கோதுமையை விட சிறுதானியங்களில் 10 சதவீதம் சர்க்கரை சத்து குறைவு; நார்ச்சத்து அதிகம்.

  ஒரு காலத்தில் அரிசி பயன்படுத்த வசதியில்லாத ஏழை, எளிய மக்களின் உணவாக விளங்கிய சிறுதானியங்களின் விலை இன்று பன்மடங்கு உயர்ந்து வசதி படைத்தவர்களின் உணவாக விளங்குகிறது.

  பொதுவாக சிறுதானியங்களில், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, புரதம், தாது உப்பு, பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

  தானியங்களிலேயே அதிக சத்து வாய்ந்த கேழ்வரகானது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல், உடல் சூட்டினை சமநிலையில் வைத்திருத்தல், குடலுக்கு வலிமையளித்தல் போன்ற பயன்களை அளிக்கிறது.

வரகு
  இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் புரதம் அதிகமுள்ள வரகை சமைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையவும், மாத விடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கு உடல் நலனை சீராக்கிக் கொள்ளவும் பயனாக அமைகிறது.

  செரிமான சக்தியை அதிகரித்து உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருப்பது, வேண்டாத கொழுப்புகளைக் கரைத்து உடல் பருமனை குறைப்பது போன்ற தன்மை கம்புக்கு உண்டு. பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்து அவர்களின் உடல் வலிமையையும் கூடுதலாக்குகிறது.
சாமை
  வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்துவது, மலச்சிக்கலைப் போக்குவது, ஆகியவற்றுக்கு ஏற்ற உணவான சாமை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாமை உணவை சமைத்து உண்ணலாம்.

  உடலுக்கு உறுதியை அளிக்கும் வல்லமையுடைய சோளம் உடல் பருமன், வயிற்றுப்புண் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
குதிரைவாலி
  இவ்வாறு பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட பாரம்பரிய உணவான சிறுதானியங்களை சமைத்து உண்டு வந்திருந்தால் உடல் பருமன், இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகாமல் நாம் இருந்திருக்கலாம். ஆனால் நாம் இவற்றை மறந்து போனதால் ஆரோக்கியத்தை இழந்து விட்டோம். இனியாவது இவற்றை உணவாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
 தினை
  சிறுதானியங்களின் உற்பத்தியில் ஈடுபடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சிறுதானிய உற்பத்தியை மேற்கொள்ள அரசும் அவர்களுக்கு வேண்டிய தொழில்நுட்ப ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க வேண்டும். சிறுதானியங்களின் உற்பத்தி அதிகரித்தால் அவற்றின் விலை குறைந்து அனைவரும் பயன்படுத்த வழி ஏற்படும்.

கட்டுரையாளர்:  என்.எஸ்.சுகுமார்
நன்றி: தினமணி நாளிதழ்.

இயற்கை அன்னையின் படைப்புகள் இதில்தான் எத்தனை சிறப்புகள்....

Thursday, November 14, 2013

நீல திமிங்கிலம் (Blue whale)

  

  நீல திமிங்கலங்கள்  (Blue whale) சில கிட்டத்தட்ட 120ft உள்ள பெரிய பாலூட்டி ஆகும். நீல திமிங்கிலம் அழகான அனைத்து கடல்களில் காணப்படும் ஆனால் திமிங்கலங்கள் வெப்பமாண்டல கடல்களில்  வாழ விரும்புகின்றன. பல ஆண்டுகளாக நீல திமிங்கிலம் உலகம் முழுவதும்  மனிதனால் வேட்டையாடி அழிக்கப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் 12,000க்கும் குறைவாகவே நீல திமிங்கலங்கள் உள்ளதாகக் கருதப்படுகிறது. நீல திமிங்கலங்களின் முக்கியமாக உணவு (Krill) கூனிப்பொடிகள் ஆனால் அவைகளின் மகத்தான பெரிய வாய் உள்ளே மீன், மற்றும் சிறிய மீன்களின் தண்ணீருடன் அகப்பட்டுக்கொள்ளும். தண்ணீர் திமிங்கலங்கள் வாயில் இருந்து வடிகட்ட பற்கள் ஆயிரக்கணக்கான உள்ளது.
  முழுவதும் வளர்ந்த நீல திமிங்கலத்தில் இருந்து வெளிவரும் ஒரு மூச்சுக் காற்று கிட்டத்தட்ட 2,000 பலூன்கள் நிரப்ப போதுமான காற்றை உருவாக்கும்! 
 நீல திமிங்கிலம் பொதுவாக தனித்தே கடல் பரப்பில் சுற்றித்திரியும், தனியாக அதன் வாழ்க்கையை பெரும்பாலும் செலவழிக்கிறது. அதன் ஜோடிகள் தேடி பயணமாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த நீல திமிங்கலங்கள் இந்த காலத்திற்கு ஒன்றாக இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அவை ஒன்றுகொன்று தொடர்பு கொள்ளும் இவை 50 க்கும் மேற்பட்ட நீல திமிங்கலங்கள், இப்பகுதியில் காணப்படும்.
  பெண் நீல திமிங்கலங்கள் 2 முதல் 3 ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்கு தகுதியடைகிறது குளிர்கால ஆரம்பத்தில் இது வழக்கமாக நடைபெருகிறது. நீல திமிங்கிலம் கன்று 6 மாதங்கள்வரை அம்மாவின் அரவனைப்பில் இருக்கிறது.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்  இவைகளை அழிக்காமல் பாதுகாப்போம்...

Wednesday, November 13, 2013

செம்புலி

 'கோகர்' என்ற செம்புலியானது, (பூனை இனத்தை சார்ந்த கொடுமையா விலங்கு) மலைச்சிங்கம், பூமா, மான் புலி என்று பலவாறக அழைக்கப்பசுகிறது. இதன் அறிவியல் பெயர் 
   மற்ற பெரிய பூனை இன விழங்குகளோடு ஒப்பிடும் போது நிலை கொஞ்சம் பரவாயில்லை. மான் மற்றும் ஓநாய்கள் போன்ற பெரிய பாலூட்டிகள் இரையாக்கிக்கொள்கின்றன பெரும்பாலும் உணவு இல்லாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க முடியும். மேலும் 30ft வரை தாண்ட அற்புதமான திறனை உடையது. கடுமையான குளிர்காலத்தில்  நன்கு  வேட்டை ஆடும்
  இது ஒரு சிறந்த வேட்டைகாரன் தண்டு மற்றும் பதுங்கியிருந்து துரத்தி இரையை வேட்டயாடும்   மான், கடமான் , மற்றும் ஆடு , அதே போல் உள்நாட்டு கால்நடை , குதிரைகள் மற்றும் ஆடுகள் என அடங்கும் . இது பூச்சிகள் மற்றும் விலங்குகள் போன்ற சிறிய உயிரினங்களையும் வேட்டையாடும். இந்த பூனை  அடர்ந்த மரங்களுக்கு அடியில் வளரும் புதர் மற்றும் பாறை பகுதிகளில் உள்ள வாழ்விடங்களில் வாழ விரும்புகிறது ஆனால் திறந்த பகுதிகளிலும் வாழ முடியும் 
  வசந்த காலம் மற்றும் கோடை காலத்தில் பொதுவாக 1 முதல் 4 குட்டிகள் வரை இணப்பெருக்கம் செய்யும். ஒரு கோகர் பொதுவாக அதன் 20 வயது வரை வாழும் .
  Cougars பெரிய அளவிலான காரணமாக, கோகர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அறியப்படுகிறது . 1990 களின் பிற்பகுதி வரை வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரு இடங்களில் வசிக்கும் கோகர் 32 வெவ்வேறு இனங்கள் சமீபத்திய ஆய்வுகள், எனினும், 32 கோகர் இனங்கள் பெரும்பான்மை டிஎன்ஏ கூட ஒத்த என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க கண்டத்தில் காணப்படும் கோகர் மட்டுமே 5 வெவ்வேறு இனங்கள் உள்ளன. 
  பூமியின் வடக்கு கோளத்தில் மற்ற எந்தப் பாலூட்டியை விடவும் மிகவும் விரிந்த பரப்பளவில் செம்புலி கானப்படுகிறது.
  கனடா தொடங்கி, அமெரிக்கா, சிலி நாட்டின் தெற்கு நுனி வரை செம்புலி காணப்படுகிறது.
  அதேபோல, பலேவேறு வகையான காடுகள் முதல், தாழ்நிலங்கள், பாலைவனப் பரப்புகளிலும் இவை உலவித் திரிகின்றன.
  22நாடுகளில் செம்புலிகள் இயர்கையாய் கானப்படுகின்றன. அந்த நாடுகள், அர்ஜென்டினா, பெலிஸ், பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஈக்குவடார், எல்சால்வடோர், பிரெஞ்சு, கயானா, குவாதிமாலா, கயானா, ஹோண்சுராஸ், மெச்சிகோ, நிகரகுவா, பணாமா, பரகுவே, பெரு, சுரினாம், அமெர்க்கா, உரிகுவே, வெனிசூலா ஆகியவை. 
 சூழலுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டு வாழக்கூடிய செம்புலி, வடஅமெர்க்கா, தென்அமெரிக்காவின் அனைத்து வகையான முக்கிய வாழியிடங்களிலும் காணப்படுகிறது. அவற்றில், உயராமான ஆண்டிஸ் மலைத் தொடர்களும் அடங்கும். ஆனால், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்தைத் தொடர்ந்து வடஅமெர்க்காவின் கிழக்குப் பகுதி முழுவதும் 200 ஆண்டுகளில் ஒரு செம்புலி கூட இல்லாமல் ஒழிக்கப்பட்டுவிட்டது.
  இன்று கோகர் மட்டுமே வட கிழக்கு அமெரிக்காவில் புளோரிடா பகுதிகளில் காணப்படுகிறது மற்றும் மேற்கு கடற்கரையில் cougars எல்லை வியத்தகு மனித தலையீடுகளால் குறைக்கப்பட்டுள்ளது . கோகர் பொதுவாக கனடிய ராக்கி மற்றும் தெற்கு மெக்ஸிக்கோ இன்னும் மலைப்பாங்கான பகுதிகளில் காணப்படுகிறது .
 புளோரிடா பகுதியில் சிறு எண்ணிக்கையிலான செம்புலிகள் காணப்படுகின்றன. அதேவேளையில், கிழக்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் செம்புலிகளின் எண்ணிக்கை  கொஞ்சம் கூடிவருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்.

இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...

Tuesday, November 5, 2013

ஆஸ்திரேலியக் கடலில் புதிய வகை டால்பின் மீன்

 
வடக்கு ஆஸ்திரேலியாவை அண்டிய கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை.
பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.
இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.
இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும்.
இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் அதிசயம் கடல் வாழ்  உயிரினம்
இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...

Wednesday, October 30, 2013

வெளிநாட்டு வண்ணக் குயில்

 
சிட்டுக்குருவி போன்ற சிறிய பறவை இனம் குக்கூ பின்ச். மஞ்சள் நிறத்தில் அழகாகத் தோன்றும். அளவில் சிறிதாக இருந்தாலும் மிகத் தந்திரமான பறவை இது.
 குக்கூ பறவைக்கும் குயில்கள் போலவே கூடுகட்டத் தெரியாது. அதனால் மற்ற பறவைகளின் கூட்டில்தான் முட்டையிடும். குயிலானது காகக்த்தின் கூட்டில் மட்டுமே  முட்டையிடும். ஆனால் இந்த குக்கூ பின்ச் பறவையோ சிஸிடி கோலா மற்றும் பிரினியா ஆகியவற்றின் கூடுகளில் முட்டையிடும். இந்த 3 பறவை இனத்தின் முட்டைகளும் ஒன்றுபோலவே இருக்கும்.
  குக்கூ பின்சின் முட்டை இளஞ் சிவப்பு அல்லது இளம்பச்சை நிறத்தில் இருக்கும். முட்டை ஓட்டில் 'மார்டன் ஆர்ட்' வரைந்ததை போன்று காட்சியளிக்கும். இது மற்ற பறவையின் கூட்டில் முட்டையிட்டாலும், அவைகள் இது தங்கள் முட்டையில்லை என்பதை எண்ணிக்கையின் அடிப்படையில் கண்டுபிடித்துவிடும். ஆனால் தங்கள் முட்டையை மாற்றி உடைத்துவிடக்கூடாதே என்ற அச்சத்தில் குக்கூவின் முட்டையையும் சேர்ந்தே அடைகாக்கின்றன. குஞ்சு பொரித்த தங்கள் குஞ்சு போன்று கருதியே நன்கு உணவூட்டி பராமரிக்கிறது. ஆனால் அத்தனை நிகழ்வுகளையும் தந்திரமாக கண்காணிட்டு வரும் குக்கூ பின்ச்கள், குஞ்சு பொரித்த 3 நாட்களுக்குள்ளாக தனது குஞ்சுகளை மட்டும் அடையாளம் கண்டு தூக்கிச் சென்றுவிடுகிறது.
 தந்திரத்தில் கெட்டிக்கார பறவையாக திகழும் குக்கூவை வெளிநாட்டு வண்ணக்குயில் என்று சொல்லிவிடலாம்.

இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...