உலகில் இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு காரணமாக பலர் மரணம் அடைகிறார்கள். ரத்தத்தில் இருவகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ளன. அவை 1. எச்.டி.எல். ( எச்.டி.எல் -ஹை டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) 2. எல்.டி.எல். - (லோ டென்சிட்டி லிப்போ புரொட்டின்ஸ்) இதில் எச்.டி.எல் சத்து 40 மில்லி கிராம் சதவீதத்துக்குக் குறையக் கூடாது. அதே போல் எல்.டி.எல் அளவு 100 மில்லி கிராம் சதவீதத்துக்கு குறைவாகவே இருக்க வேண்டும்.
ரத்தத்தில் கொழுப்பு தேவைக்கு அதிகமாகச் சேருவதையும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்க எச்.டி.எல். சத்து உதவுகிறது. தினமும் 2 அல்லது 3 கிளாஸ் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் எச். டி.எல். அளவு அதிகரிக்கிறது என்று டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதற்கு ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஹெஸ்பிரிடின் என்ற சத்து காரணமாக அமைகிறது. எனவே தினமும் ஆரஞ்சு சாறு குடித்து வந்தால் மாரடைப்பு மற்றும் இருதயக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை கூறியுள்ளனர்.
(ஆதாரம்: பொது அறிவுப்பெட்டகம்.)
நன்றி : தினமணி ஞாயிறு கொண்டாட்டம்.
இயற்கை வளங்கள் நிலம், நீர், மண்வகைகள், செடிகள் மற்றும் விலங்குகள்,வனவிலங்குகள், பறவைகள்,பூச்சிகள் காத்து இயற்கையை காப்போம்...
No comments:
Post a Comment