Friday, January 13, 2012

பிக்மிஸ் இனத்தவரின் அதிசய வேட்டை

 
   ஆப்பிரிக்காவில் மக்கள் நடமாய்யம் இல்லாத அடர்ந்த மத்திய காடுகளில் இன்னும் ஒரு பிரிவினர் பழங்குடியினரின் வாழ்க்கை  நிலையில் இருந்து மாறமல் வாழ்க்கையை  நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு மீட்டர்  உயரம் வரை மட்டுமே இருக்கின்றனர். இவர்கள்  தான் பிக்மி இனத்தவர். இவர்கள் சுமார் 100  பேர் கொண்ட குழுவினராக வாழ்கின்றளர்.  இவர்கள் நிலையாக ஒரே இடத்தில்  வாழ்வதில்லை. எங்கெல்லாம் உணவு  கிடைக்கிறதோ, அங்கே போய் தங்கள் குடியிருப்பை மாற்றிக் கொள்கின்றனர். தற்போது இவர்களது நாகரிகம் சற்று   வளர்ந்துள்ளது. பிக்மி இனத்தவரின் வழக்காமான  செயல்கள்ல் ஒன்று தேன் எடுப்பது.  மற்றொன்று வேட்டையாடுவது.  
       பிக்மிஸ் இனத்தவர்கள் 'வைண்ட் பைப்' என்ற  ஒருவகையான ஆயுதத்தை வைத்துள்ளனர். இதில்  ஒருவகையான பச்சைத் தவளையின் உடலில்
இருந்து கொடிய விஷத்தை எடுத்து, அதை சிறிய   ஊசி போன்ற மரகுச்சிகளில் தடவுகின்றனர். பின்னர் மூங்கில் குழாயினுள்  பொருத்துகின்றனர். பின்னர், மூங்கில் குழாயை வாயில் வைத்து இலக்கை நோக்கி  ஊதவும், உடனே விஷம் தடவப்பட்ட மரக்குச்சி  விழங்குகளின் உடலில் பாய்கிறது. இப்படி  விலங்குகளை கொன்று, வேட்டையாடுகிறார்கள்.

மனிதன் இயற்கையை இயற்கையாக இருக்கவிடாமல் இருப்பதே இயற்கை அழிவிற்கு காரனம்.

No comments: