இந்திய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என்று யானைகள் இருவகைப்படுகின்றன. இந்திய யானைகளை ஆசிய யானைகள் என்றும் கூறுகின்றனர். வாழ்விடம் யானை அடர்ந்த புதர் மண்டிய மலைப்பாங்கான பகுதிகளில் வாழ விரும்புகின்றன. பச்சை மூங்கில் மற்றும் புல் கூடுதல் உள்ள இடங்களை மிகவும் விரும்புகின்றன. மற்றும் ஈரமான காடுகள் அல்லது குளிர் உள்ள இடத்தில் இருக்கும். அவைகள் தண்ணீர் உள்ள இடம் ஓடை அல்லது ஆறு, குளம் உள்ளபகுதியை தேர்வுசெய்து தனது இருப்பிடத்தை மாற்றியமைக்கும். இயற்கையான உனவை விரும்பி உண்ணும்.
இந்த யானைகள் ஆசியாவில் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, இலங்கை, சுமத்ரா, ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் கானப்படுகின்றன. இந்தியாவில் இமயத்தின் அடிவாரம், அசாம், உத்திரப்பிரதேசம், நீலகிரி, மைசூர், குடகு, கேரளம் போன்ற இடங்களில் யானைகள் மிகுதியாக கானப்படுகின்றன.
இலங்கையின் வடக்குப் பகுதியில் கானப்படும் ஒருவகை யானைகள் உருவத்தில் சிறியவை. இவற்றுக்கு தந்தம் கிடையாது. எனவே இவற்றைத் தனி இனமாகவும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் இலங்கையில் தந்தத்துடன் கானப்படும் யானைகள் இந்தியாவில் இருந்து சென்றவையே. இந்திய யானைகள், எலிபாஸ் மேக்ஸிமஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை.

ஆப்பிரிக்க யானைகள், ஆப்பிரிக்காவில் உள்ள பாலைவனத்தின் தென் பகுதியிலும், எத்தியோப்பியா, கென்யா நாட்டிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை லோக்சோடோண்டா ஆப்பிரிக்கானா என்ற இனத்தைச் சேர்ந்தவை.
இந்திய யானைகளுக்கும் ஆப்பிரிக்க யானைகளுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. இந்திய யானைகளின் சராசரி உயரம் 9 அடி. மிகப் பெரிய யானைகள் 10 அடி 6 அங்குலத்துக்கு மேல் வளர்வதில்லை. ஆப்பிரிக்க யானைகளின் சராசரி உயரம் 11 அடி. சில யானைகள் பதினொன்றரை அடிக்கு மேலும் வளர்வது உண்டு.
இந்திய யானைகள் சுமார் 5 டன் எடை இருக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானைகளோ சுமார் ஆறரைடன் எடை இருக்கும்.
இந்திய யானைகளின் தலை ஆப்பிரிக்க யானைகளின் தலையைவிட பெரியது.
இந்திய யானைகளின் காதுகளை விட ஆப்பிரிக்க யானைகளின் பெரியவை. அதன் காதுகள் தோள் வரை நீண்டிருக்கும். உலகிலுள்ள எல்லா விலங்குகளின் காதுகளையும்விட ஆப்பிரிக்க யானைகளின் காதுகளே மிகப் பெரியவை.
இந்திய யானைகளில் பெண் யானைக்குத் தந்தம் கிடையாது. ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் இரண்டு யானைகளுக்கும் நன்கு நீண்டு வளர்ந்த தந்தங்களும் உண்டு.
இந்திய யானைகளின் முன் கால்களில் ஐந்து நகங்களும், பின் கால்களில் நாண்கு நகங்களும் உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானைக்கு முன்கால்களில் நான்கு நகங்களும், பின்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும்.
இந்திய யானையின் முதுகு குவிந்திருக்கும். இதன் முதுகின் நடுப்பக்கம் மற்ற இடங்களைவிட உயர்ந்திருக்கும். ஆனால் ஆப்பிரிக்க யானையில் உயர்ந்த பாகம் அதன் தோள்களே ஆகும்.
இந்திய யானையின் துதிக்கையின் முன்பாகத்தில் விரல் போன்ற தசையமைப்பு சற்று நீண்டு காணப்படும். இதற்கு, துதிக்கையின் உதடு என்று பெயர். இந்திய யானையின் துதிக்கையில் ஒரே ஒரு உதடு மட்டும் உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானையின் துதிக்கையின் முன் பக்கத்திலும், பின் பக்கத்திலும் உதடுகள் கானப்படுகின்றன. அதாவது ஆப்பிரிக்க யானையின் துதிக்கையில் இரண்டு உதடுகள் உள்ளன.
இந்திய யானை பொதுவாக சாதுவானது. பார்க்க அழகாக இருக்கும். ஆப்பிரிக்க யானை அவ்வளவு அழகாக இருக்காது. ஆனால் மூர்க்கமானவை. பெண் யானை, ஆண் யானையைவிட அதிக ஆபத்தை விளைவிக்கலாம். இந்திய யானையின் நிறத்தைவிட ஆப்பிரிக்க யானையின் நிறம் சற்று அடர்ந்திருக்கும்.
மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்திய யானைக்கு மதம் பிடிப்பது உண்டு. ஆனால் ஆப்பிரிக்க யானைக்கு மதம் பிடிப்பது இல்லை.
மழைக்காடுகள் இற்கையின் பொக்கிஷம், வனவிலங்குகள், பறவைகள் காத்து இயற்கையை காப்போம்...

No comments:
Post a Comment