ஹானலுலூ: காடு மற்றும் கடல் பகுதிகளில் வசிக்கும் பறவையினங்களில் ஒன்றான அல்பெடராஸ், உலகிலேயே மிகவும் வயதான தாய்ப்பறவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பறவை 60 வயதிலும் முட்டை போடுகிறதாம். அமெரிக்காவின் கடல் மற்றும் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள், ஹானலுலூவின் வடமேற்கு பகுதியில் இருந்து சுமார் 2000 கி.மீ. தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அல்பெட்ராஸ் என்ற பறவையின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், அந்த முட்டையை போட்ட தாய்ப்பறவை 60 வயது நிறைந்தது என தெரியவந்துள்ளது. விஸ்டம் என்று பெயரிடப்பட்ட இந்த அல்பட்ராஸ், 1956&ம் ஆண்டு 5 வயதில் முதல் முட்டை இட்டது என்று அமெரிக்க ஜியலாஜிக்கல் கணக்கெடுப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பறவைகள் பாதுகாப்பு நிறுவனத்தலைவர் மற்றும் பறவை இன ஆர்வலர் ப்ரூஸ் பீட்டர்ஜான் கூறியது: ஆராய்ச்சி குறிப்பேடுகளின்படி ராட்சத பறவை இனமான அல்பட்ராஸ், 90 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அதிக அளவில் வசித்துள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள முட்டைக்கு முன்பு, விஸ்டம் 30 முதல் 35 முட்டைகள் இட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த இனம் அழிந்து வரும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அரிய பறவை இனமான அல்பெட்ராஸை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

காடுகள் வளர்த்து இயற்கையை காத்து, மாசுபாடு இல்லாமல் செய்து வளரும் தலைமுறை காப்போம்...
நன்றி தமிழ் முரசு.....
No comments:
Post a Comment