Tuesday, April 13, 2010

உணவு சமைப்பதற்கு விறகு உண்டு
சமைப்பதற்கு உணவுதாணியம்,
பயிர் செய்ய நிலம் எங்கே?
சீமைக்கருவேலமரம் (வேலிகத்தான்மரம்)
     செடி, கொடி இது எல்லாமே நமக்கு இந்த பூமிக்கு நன்மை உடையதாகவே இருக்கும். ஆனால் நாம் இந்த இயற்கையை அழித்து கொண்டு இருக்கிறோம். அதனால் பூவி மண்டலம் வெப்பமயமாகிறது. இதுஒருபுரம் இருக்க நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தினால் நமது புவி வெப்பம் அடைவதுடன் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து, மற்ற தாவரங்கள் வளரவிடாமல் தடுத்து நிலத்தில் பயிர் செய்யமுடியாமல் பாலை நிலமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறது. உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுகிறதா, இல்லையா பாருங்கள். அதுதான் சீமைக்கருவேலை. இதற்க்கு இந்த பெயர் வரக் காரனம் அந்தக் காலத்தில் வெளி நாட்டை சீமை என்று குறிப்பிடுவார்கள் அங்கு இருந்து கொண்டுவந்தது அதனால்தான் அந்தப்பெயர்

    இந்த சீமைக்கருவேலமரம்
இது இந்திய மண்ணிற்கு பூர்வீகமானது அல்ல இதன் தாயகம் தென் அமெரிக்கா. வேளான் பல்கலைகழகத்தால் கொண்டு வரப்பட்டது. மிதமான வெப்ப, மற்றும் வெப்பமான வறண்ட பிரதேசங்களில் இதனை காண முடியும். இந்த மரம் மிகவும் வறண்ட சூழலையும் தாக்கு பிடித்து வளரக்கூடியது.

  வறட்சியிலும் இந்த மரம் வாடாது. காரணம், நிலத்தடியில் நீர் இல்லையெனில், காற்றில் இருக்கும் நீர் சத்தை உறிஞ்சி வாழும் சக்தி இந்த மரத்திற்கு உண்டு.

  காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால், இந்த மரம் வளர்ந்துள்ள பகுதிகள் பெரும்பாலும் வெப்பமாகவும் வறட்சியாகவே இருக்கும். எனவெ அந்த பகுதிகளிள் மழை பெய்யும் அளவு குறையும்.

  தான் வளர்ந்துள்ள நிலத்தை வேறு ஏதும் விளையாத தரிசு நிலமாக மாற்றிவிடும்.

   இந்த மரத்தின் முள் குத்தினால் அந்த புண் புரையோடிவிடும்.சிலருக்கு காலவே எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

   உணவு சமைப்பதற்காக இந்த மரத்தை இங்கு கொண்டு வந்தார்கள் உணவு சமைப்பதற்கு விறகு உண்டு சமைப்பதற்கு உணவுதாணியம் பயிர் செய்ய நிலம் இல்லை. இப்படியே போனால் இன்னும் 10, 15 வருடங்களில் உணவு உற்பத்தி செய்ய நிலங்களே இல்லாமல் போய்விடு்ம் நிலை ஏற்படும்.


   தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, இன்னும் பல ஊர்களின் நிலமை இந்த சீமைக்கருவேலமரத்தினால் விவசயம் செய்யமுடியாமல் இந்த மரத்தை வெட்டி கரிமூட்டம் செய்து வாழ்க்கையை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை யார் களை எடுப்பார்கள் என்று தெரியவில்ல. இதை படிக்கும் அன்பர்கள் உங்களுக்கு சீமைக்கருவேலமரம் பற்றிய தீமையை தெரிந்ததை உங்கள் இடுகயில் வெளியிடவும் மற்றவர்களையும் எச்சரிக்கவும். ஒவ்வொருவதும் ஒரு சீமைக்கருவேலமரத்தை அழிக்கவும் நாட்டை பாலை நிலமாக்கிவிடாமல் காக்கவும்.

படித்ததும் தொகுத்ததும் அனுபவித்த அனுபவமும்.

நன்றி..

சோ.ஞானசேகர்.

No comments: