ஆப்பிள்
மத்திய ஆசியாவில்தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லாவிதமான குளிர்ப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp.
அனேகமாக, ஆரஞ்சு வகை மரங்களுக்கு அடுத்ததாக, ஆப்பிள்தான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிர் செய்யப்பட்டு வரும் மரமாகும்.
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 7ஆயிரத்து 500 வகையான ஆப்பிள்கள் மொத்தம் 6 கோடி 'டன்' அளவுக்கு விளைவிக்கப்படுகிறது.
ஆப்பிள் உற்பத்தியில் இந்தியா உலகளவில் 10-வது இடம் வகிக்கிறது.
அமெரிக்க் கிறிஸ்தவ மத போதகரான சாமுவேல் 'சத்யானந்த் ஸ்டோக்ஸ்' இல்லாவிட்டால் இந்தியாவில் ஆப்பிள் உற்பத்தி பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருக்காது.
1904-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த சாமுவேலுக்கு இந்தநாட்டையும், இந்தநாட்டு மக்களையும் மிகவும் பிடித்துப்போனது. அவர் தனது மதபோதகர் பணியைத் துறந்துவிட்டு இந்தியப் பெண் ஒருவரை மணந்தார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா அருகில் உள்ள கோட்கர் கிராமத்தில் மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.
கோட்கர் ஓர் ஏழ்மையான கிராமம். அங்குள்ள மக்களில் பெரும்பாலனவர்கள் அடிமை தொழிலாளர்களாக இருந்தனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்று சாமுவேல் நினைத்தார்.
கோட்கர் பகுதி மண், ஆப்பிள் சாகுபடிக்கு ஏற்றது என்று சாமுவேல் கண்டுபிடித்தார். அவர், தனது தாய்நாடான அமெரிக்காவில் லிருந்து 'கோல்டன் டெலிசியஸ்' ஆப்பிள் வகைச் செடிகளை வரவழைத்தார். அவற்றை தனது தோட்டத்தில் நட்டு வளர்த்தார். நான்காண்களுக்கு பின் அவற்றில் மிகவும் ருசியான ஆப்பிள்கள் காய்த்தன.
பிறகு உள்ளுர் விவசாயிகளுக்கும் சாமுவேல் ஆப்பிள் செடிகளைக் கொடுத்தார். அதன் விளைவாக, சில ஆண்டுகளில் அப்பகுதி முழுவதும் ஆப்பிள் தோட்டங்கள் உருவாயின. மக்களின் பொருளாதர நிலையும் வெகுவாக உயர்ந்தது.
இன்று, இமாச்சலப் பிரதேசம் இந்தியாவின் 'ஆப்பிள் மாநிலமாகவும்', கோட்கர், ஆப்பிள் தொழில்துறையின் இதயமாகவும் விளங்குகிள்றன.
படித்தது..
சோ.ஞானசேகர்
1 comment:
அறியாத விஷேயங்கள் அறியத்தூண்டும் ஆவல்
வாசகரை தன்னிடம் வசப்படுத்தும் ஆற்றல் தங்களிடம் அபரிமிதமாக உள்ளது.
ஆழ்ந்து படிக்க நேரம் ஒதுக்க வேண்டியுள்ளதால் மனம் சஞ்சலமில்லாத காலை வேளையில் 8.30 ஆழ்ந்து படித்து தெளிவு பெற என் மனம் கூறுவதால் இரவு விடைபெறுகிறேன் தினமணி புகைப்படகலைஞர் ஆர்க்காடு சுந்தரமூர்த்தி கணேஷ்
Post a Comment