Friday, March 20, 2009

பேரையூர்


பேரையூர்
இந்ஊர் பெயரில் நிறைய ஊர்கள் இருக்கிறது இது மதுரை மாவட்டத்தில் உள்ளது. இதை சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இந்த ஊர்தான் பெரிய டவுன். ஒரு முக்கிய விசயம் இந்த ஊரின் பெயர் முத்துக்குமாரசாமி தும்பிச்சநாயக்கணூர் பிரிட்டிஸ் காலத்தில் வந்த அதிகாரி ஊர் பேர் என்ன என்று கேட்டதற்க்கு ஊர் மக்கள் ஜமின்தார் பெயர்தான் ஊர் பேர் என்று சொல்ல பேரேஊரா என்று கேக்க அன்றிலிருந்து பேரையூர் ஆனது என்று சொல்லக் கேள்வி எவ்வளவு உண்மை என்று தெரியாது நாங்கள் படிக்கும் போது இங்குதான் உயர் நிலைப் பள்ளிக்கு வரவேண்டும். இங்கு நான் 7ஆம் வகுப்பு வந்து சேர்ந்தேன். முதலில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது நான் அடிக்கடி ஸ்கூல் மாரியதால் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை கூடிய சீக்கிரம் நிறைய நன்பர்கள் வட்டம் அதிகமாகியது 6,7,8 வகுப்புகள் ஊருக்குள் இருக்கும் 9,10,11 ஆகிய வகுப்புகள் முக்கு ரோட்டில் இருக்கும் முக்கு ரோடு என்றல் நான்கு ரோடு சேரும் கல்லுப்பட்டி ரோடு, உசிலம்பட்டி ரோடு, சாப்டூர் ரோடு, ஊருக்குள் வரும் ரோடு. ஆண்கள் மேல் நிலை பள்ளி, பெண்கள் மேல் நிலை பள்ளி இது ஊருக்குள் உள்ளது. எல்லா மதத்தவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் எந்த பாகுபாடும் இல்லாமல். மேற்கு தொடர்ச்சி மலை பக்கததில் இருக்கிறது ஆனால் வறச்சியாக இருக்கும். ஸ்கூல் பக்கத்தில் உள்ள மலை மண்மலை என்று பெயர் அடுத்து மெட்டை மலை உள்ளது இதன் அடிவாரத்தில் சுப்பிரமணி கோவில் உள்ளது. இதற்க்கு எதோ ஒரு கிரி ஞாபகம் இல்லை தெரிந்தவுடன் ஞாபகப்படுத்துகிறேன். இது ஒரு பழைமையான கோவில். இங்கு சரவணபொய்கை உள்ளது பொய்கையில் குகை போன்ற அமைப்பில் நீர்விழும் தூம்புவா கல்லில் செதுக்கப்பட்டுள்ளது அதில் எப்போதும் எந்த காலத்திலும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும்தண்ணீர் மிகவும் சுவையாக இருக்கும். மாமரம் நிறைய உண்டு நாங்கள் மாங்காயை அடித்து சாப்பிட்டு இருக்கிறேம். ஸ்கூல் அரை நாள் லீவு என்றால் பாதி ஸ்கூல் அங்குதான் இருக்கும் ஸ்கூலுக்கு போகாமல் கட் அடித்து திரிபவர்கள் எல்லாம் இங்குதான் இருப்பார்கள் இதுதான் எங்களுக்கு சரணாலயம். மெட்டைமலை மேல் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அங்கு ஒரு இஸ்மாமிய தர்க்கா உள்ளது. ஸ்கூல் ஆசிரியர்கள் எல்லாம் நன்றாக பாடம் எடுக்கூடியவர்கள் நாம்தான் சரியாக அவர்களை பயன்படுத்தவில்லை. ஆனால் இப்பெழுது ஊர் ரெம்ப மாரிவிட்டது. அப்போது இங்கு உள்ள ஒரே பொழுது போக்கு முருகன் சிணிமா தியேட்டர் 45 பைசா டிக்கட் அப்போது. பள்ளியில் இருந்து பிக்னிக் செல்லும் இடம் சாப்டடூர் கேணி இங்கு மலை மேல் செல்லவேண்டும் ரெம்ப நல்ல இடம். கேணியில் குளித்து கும்மாலம் போட்டு எடுத்துச்சென்ற சாப்பாட்டை சாப்பிட்டு மலைமேல் ஏரி விளையாடி கலைத்து மீண்டும் சாப்டடூர் வந்து பஸ்பிடித்து பேரையூர் வந்து அவரவர் ஊர் போய் சேர்வேம். இன்னும் ஒரு சிறப்பு எல்லா ஊர்களிளும் சந்தனக்கடை இருக்கும் ஆனால் இங்கு கருப்பு கலவை சந்தனம் பெயர் பெற்றது வாப்பா சந்தனக்கடையில் என்னுடைய நன்பரின் வாப்பா இருப்பார் அவரை நாங்கள் மாமா என்றுதான் சொல்வோம் எங்களை மாப்புள்ளை மார்கள் என்று சொல்வார்கள். கடையில் நிறைய வித்தியாசமான பாட்டில்கள் இருக்கும் அதில் கலர் கலரா தைலவகை சென்ட், அத்தர், பண்ணீர்,புணுகு, ஜவ்வாது என்னென்ன வாசனை திதவியங்கள் உண்டே அத்தனையும் இருக்கும் சந்தனம் கலக்கும் போது ஒரு சைக்கிள் போக்ஸ் கம்பியை பாட்டலில் விட்டு சந்தனத்தில் இரண்டு சொட்டு விட்டுட்டு கம்பியை நம் சட்டையில் தடவி விடுவார் சட்டையில் தடவாதீர்கள் மாமா நார்துன்னு சொன்னா சென்ட் போட்டாத்தான் பொண்ணுங்க பின்னால் வரும் என்று கேலிசெய்வார் ரெம்ப நல்ல மனிதர். அடுத்து ஒரு மனிதர் கிட்டு அய்யர் இவர் ஹோட்டலில் படிக்கிர பசங்க சாப்பிட போனால் நன்றாக பேசுவார் பைசா கொஞ்சமாக கொடுத்தாலும் வாங்கிக்கொள்வார் என்னுடைய பசங்கள்தான் படிக்கமாட்டான்கள் நீங்களாவது நன்றாக படியுங்கள் என்பார் இவர்கடையில் எனக்கு பிடித்தது பூரி கிழங்கு அதன் சுவை இன்னும் என் நாக்கில் இருக்கிறது. இப்பொழுது எத்தனையே இடத்தில் சாப்பிட்டும் அதற்க்கு ஈடு இல்லை. அடுத்து பஸ்டாண்ட்டில் உள்ள பழய பஸ்டாண்ட்டில் பரோட்டா கடை இங்கு நைட்தான் எங்கள் படைகள் செல்லும் அப்பொழுதான் ஒரு தாத்தா இருப்பார் அவரும் நல்லமனிதர் கொடுகிர காசை வாங்கிக்கொண்டு படிக்கிற பசங்க நல்லா சாப்பிடடுங்கடா என்று உரிமையேடு சொல்வார். இதனால் அவருக்கும் அவர் மகனுக்கும் ஒருநாள் சண்டை வந்து விட்டது சர்வர் போட்டுக் கொடுத்துவிட்டார். ஆனால் தாத்தா இது நான் வைத்தகடை பசி, படிப்புனா என்ன என்று உனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெரியும் பசிக்காக சின்னவயதில் வேலை செய்திருக்கிறேன் வசதி இருந்தும் நீ படிக்கவில்லை. அதனால் நான் தானம் பன்னவில்லை அவன்களும் சும்மா சாப்பிடவில்லை காசு கொடுத்துதான் சாப்பிடுகிறான்கள் என்று சொல்வார். அதனால் அவர் பையன் இருக்கும்போது நாங்கள் அதிகம் போகமாட்டோம். ரெம்ப நல்லமனிதர். அடுத்து நாங்கள் தங்கியிருந்த ரூம் பரிட்சை நேரத்தில் ஒரு 3 மாதம் தங்கியிருப்போம் ஒரே ரூம் 20 பேர்க்குமேல் தங்கியிருப்போம் சிலபேர் காசு கொடுக்க முடியாது அர்களும் சேர்ந்து தங்கியிருப்போம் இடத்தின் சொந்தக்காரர் நல்லமனிதர் படிக்கிற பையன்களிடம் அதிகம் பைசா வாங்க மாட்டார் ஆனால் மிகவும் கண்டிப்பானவர் எதுவும் தப்பு பண்ணினால் தண்டிக்காமல் விடமாட்டார் அவங்க கணக்குபிள்ளை தான் வந்து அவ்வப்போது மிரட்டுவார் எப்பவும் அந்த ரூம் படிக்கிபசங்களுக்குதான் கொடுப்பார் அது தான் பெரியரூம். இப்பொது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. இன்னும் நிறைய பேசஇருக்கிறது மீண்டும் பேசலாம். ஞானசேகர்.

Wednesday, March 11, 2009

குற்றாலம்

குற்றாலம்

எனக்கு மலையும் மலைசார்ந்த இடங்கள் ரெம் பிடிக்கும் அதனால் சின்னவயதில் மலையை எங்கு பார்த்தாலும் ஏர ஆரம்பித்து விடுவேன். எங்கள் ஊர் மேற்கே சந்தையூர் என்ற ஊர் இருக்கும் அங்கும் மலை இருக்கும். பள்ளி விடுநமுறை நாளில் அங்கு போனால் மலை மேல் ஏரி இறங்குவேன்.படிக்கும் போது பேறையூர் மொட்டமலை, மண்மலை,டி.கல்லுப்பட்டி தேவன்குறிச்சிமலை, கோபால்சாமி மலை இப்படி நிறைய இருக்கிறது.ஆனால் குற்றாலமலை இயற்க்கையேடு கூடிய மலை.குற்றாலம் என்று சொன்னவுடன் நம்நினைவு அங்கு உள்ள அருவிகள்தான் ஞாபகமத்திற்க்கு வரும்.குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் தென்காசிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 8 அருவிகள் இருக்கிறது. பேரருவி,சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழையகுற்றாலம் அருவி, புலியருவி என எட்டு அருவிகள் இருக்கிறது.குளிப்பது எப்படி வேண்டுமாலும் குளிக்கலாம் ஆனால் குற்றாலத்தில் குளிப்பது சீசன் நேரத்தில் குளிப்பதுதான் குளியல். சீசன் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் நல்ல சீசன், சாதரன காலங்களில் அருவியில் தண்ணீர் கொட்டும் ஆனால் சீசனில் தென் மேற்கப் பருவக்காற்று வீசும் போது சாரல் மழையாக பெய்யும் அந்த சாரல் குளிர்ந்த காற்று மிகவும் சுகமாக இருக்கும் சொன்னால் தெரியாது அனுபவித்தால்தான் அதன் சுகம் தெரியும். மேலும் இந்த மழை நீர் மலைகளில் தவழ்ந்து, மூலிகைமேல் பட்டு குளிர்ச்சியுடன் அருவியாக கொட்டும். இதைபார்பதற்க்கே ரம்மியமாக இருக்கும். மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இதற்க்கு எண்ணெய் மசாஜ் என்று பெயர் இதற்கு ஆட்கள் உண்டு ஒவ்வென்றுக்கும் கட்டணம் உண்டு. பெண்களுக்கு தனியாக பெண் மசாஜர் உண்டு.

பேரருவி

பேரருவி (மெயின் அருவி) குற்றாலம் சென்றதும் நம்மை வரவேற்க்கும் அருவி மெயின் அருவி இது கிட்டத்தட்ட 1,200 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடலில் விழுந்து, பொங்கி தரைமட்டத்தில் விழுகிறது. இப்படி விழும் நீர் நம் தலையில் விழும்போது கூலாங்கல் விழுந்தது போல் இருக்கும்ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு.

சிற்றருவி

சிற்றருவி இந்த அருவி பேரருவிக் மேல் செண்பகதேவி அருவி செல்லும் வழியில் உள்ளது. இது சின்ன ஓடை போல் இருக்கும். குழந்தைகள் நன்றாக பயமில்லாமல் குளிக்களாம்.

செண்பகதேவி

செண்பகதேவி அருவி இந்த அருவி தரை மட்டத்திலிருந்து சுமார் 2கி.மி. இருக்கும். சிற்றருவிக்குமேல் செல்ல வேண்டும் இங்கு செண்பகதேவி கோவில் இருக்கிறது. இங்கு குற்றாலத்திற்கே உரிய குரங்குகள் நிறைய இருக்கும். நம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த அருவியில் குளிக்கும் போது மிகவும் கவனமாக குளிக்க வேண்டும், அருவிக்கு கீழ் பெரிய நீர் தேக்கம் உண்டு அடுத்து பெரிய பள்ளம் உள்ளது.நிறையப்பேர் இறந்துள்ளனர் கவனமாக இருக்க வேண்டும்.

தேனருவி

தேனருவி செண்பகதேவி அருவிக் மேல் செல் வேண்டும் மிகவும் ஆபத்தான இடம் இங்கு செல்வதை தவிர்த்தல் நலம் செண்பகதேவி அருவியில் இருந்து ஒத்தையடி பாதையில் செல்ல வேண்டும்.மலை உச்சியில் இருந்து 1000 அடிக்கு மேல் இருந்து கீழ் நேக்கி கொட்டும் போது தேன் போல் கொட்டும் இங்கு தேன் கூடுகள் நிறைய உண்டு.இதன் ஆரம்ப இடத்தை நானும் என்னுடைய நன்பரும் அடைந்துள்ளேம். யாரும் ஏற வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஐந்தருவி

ஐந்தருவி இந்த அருவி குற்றாலாத்தில் இருந்து 5 கி.மி. தூரத்தில் உள்ளது.மலையில் இருந்து விழும் நீர் ஐந்து பிரிவுகளாக பிரிந்து கொட்டுவதால் இதற்க்கு ஐந்தருவி என்று பெயர். ஆண்களுக்கும் மூன்று கிளைகளும் பெண்களுக்கு இரண்டு கிளைகளும் குளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பழத்தோட்ட அருவி

பழத்தோட்ட அருவிஇந்த அருவி வி.ஐ.பி. அருவி, ஐந்தருவிக்கு மேல் உள்ளது வணத்துறையின் அனுமதி பெற்று குளிக்க வேண்டும்.

பழையகுற்றாலம்

பழையகுற்றாலம் அருவிஇந்த அருவி குற்றாலத்தில் இருந்து 8 கி.மி.தூரத்தில் உள்ளது பழையகுற்றாலம் இங்கு குளிப்பதற்க்கு நன்றாக இருக்கும் சவரில் குளிப்பது போல் இருக்கும்.துணி துவைப்பதற்க்கு வசதியாக இருக்கும்.ஆண்களுக்கும், பெண்களுக்கும் குளிப்பதற்க்கு தனித் தனி இடங்கள் உண்டு. பெண்களுக்கு துணிமாற்றுவதற்க்கு தனி இடங்கள் உண்டு.

புலியருவி

புலியருவி இது பழையகுற்றாலம் அருவி செல்லும் வழியில் உள்ளது. சின்ன அருவி குழந்தைகள் குளிக சிறந்த இடம்.

குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவில் உள்ளது முருகன் கோவில் உள்ளது. கலைவானர் அரங்கம், படகு துறை,சிறுவர் பூங்கா, பாம்புப் பணணை ஆகியவை உள்ளது.

நெல்லை,மதுரை ஆகிய ஊர்களில் இருந்து தென்காசி வழியாக குற்றாலம் போகலாம்.நெல்லை மாவட்டத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உண்டு.

-ஞானசேகர்

Monday, March 9, 2009

மூணார்


மூணார்


இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். நான் மதுரை தமிழனாக இருந்தாலும் பிறந்தது மூனாரில். நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம். மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது. முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை. கண்கவர்மேகங்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண் கொள்ளாக் காட்சி. தமிழ்நாட்டிலிரிருந்து போடிநாயக்கனூர் வழியாக செல்ல வேண்டும். இந்த நகரை அடையும் முன்னர் போடி மெட்டு என்ற அழகிய மலையுச்சியே கேரளத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள எல்லையாகும்.


முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தேயிலைத் தோட்டத் தொழிளாலர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரம். எங்கள் ஊர் மக்கள் இங்கு முன்பு அதிகம் பேர் வேலை செய்தார்கள்.
சின்னவயதில் இருந்த இடம் இண்னும் எண் கண்முன் இருக்கிறது என்னுடைய பையன்களை அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று ரெம்ப நாள் ஆசை.

Thursday, March 5, 2009

பாஸ்டன் படுகொலையின்

இன்று...

மார்ச் 5, 1770 பாஸ்டன் படுகொலை

பாஸ்டன் படுகொலையின் ஒரு செதுக்குதல் பாஸ்டன் படுகொலை (Boston Massacre) மார்ச் 5, 1770இல் பாஸ்டன் நகரில் பிரிட்டீஸ் படையினர்களால் நடத்திய படுகொலையை குறிக்கும்.
1767இல் பிரிட்டீஸ் அரசு புதிதாக மக்கள் விரும்பாத பல வரிகளை அமெரிக்காவில் ஆரம்பித்தது. பெரும்பான்மையாக பாஸ்டன் நகரில் இதற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. இதனால் பிரிட்டீஸ் அரசு படையினர்களை பாஸ்டனுக்கு அனுப்பியுள்ளது. இப்படையினர்களுக்கும் பாஸ்டன் மக்களுக்கும் இடையில் பல சிறிய வன்முறைகள் பாஸ்டன் படுகொலைக்கும் முன்பு நடந்தன.
மார்ச் 5, 1770 அன்று ஒரு பாஸ்டனியரும் ஒரு பிரிட்டீஸ் படையினரும் வாதாடு செய்துள்ளனர். பிறகு பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இந்த வன்முறை வளந்து படையினர்கள் கூட்டம் மீது கைதுப்பாக்கிகளை சுட்டு மொத்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் காரணமாக பல்வேறு அமெரிக்க குடியேற்ற நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து அமெரிக்க புரட்சி தொடங்கியுள்ளது.
விக்கிபீடியாவில் இருந்து.

நன்றி

ஞானசேகர்

"பயங்கரவாத அமைப்புகளுக்குள் பாக்கிஸ்தான்"

'அனைத்து பயங்கரவாத அமைப்புகளுக்கு பாக். புகலிடம்'

உலகின் அனைத்து முன்னணி பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் புகழிடமாக விளங்குகிறது.
பாகிஸ்தானின் எல்லைப் பகுதியே பயங்கரவாத அமைப்புகளுக்கு புகழிடம் அளிக்கிறது. அங்கு அல்கய்தா, தாலிபான், ஹக்கானி, குல்பாதின் ஹெக்மத்யர் ஆகிய அமைப்புகளும், அவற்றுடன் தொடர்புடைய குழுக்களும் அங்கு கூட்டாக இயங்குகின்றன.
இந்த குழுக்கள் அனைத்தும் தனித் தனியானவை என்றாலும், பாகிஸ்தானில் அவை கூட்டாக இயங்குகின்றன. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் அளித்து வருகிறது.
இந்த பயங்கரவாத அமைப்பாள் பாகிஸ்தான் மிகவும் மோசமான விளைவை சந்திக்கும் நிலை வெகு தூரத்தில் இல்லை.
மீண்டும் சந்திப்போம்.

ஞானசேகர்.