பூச்சிகளுக்கும் பெர்சனாலிட்டி உண்டு
நமது கண்களுக்கு எல்லா பூச்சிகளும், வண்டுகளும் ஒரே மாதிரிதான் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்கும் தனித்தனியான ஆளுமை (பெர்சனாலிட்டி) உண்டு. நம்பமுடியவில்லை அல்லவா? ஆனால் விஞ்ஞானிகள் அப்படித்தான் கூறுகின்றனர்.
சில பூச்சிகள் மணிதர்களைப் போலவே 'கூச்ச சுபாவம்' உள்ளவையாக இருக்கின்றன, சில பூச்சிகளோ அதிரடிப் பார்ட்டிகளாக இருக்கின்றன என்று டெப்ரிசென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"உறுதி, தடாலடியாகச் செயல்படுவது, சுறுசுறுப்பு, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறுவது போன்றவை பூச்சியினங்களில் கணக்கிடப்பட்ட பொதுவான ஆளுமைப் பண்புகள். இவை, ஒவ்வொரு பூச்சி, வண்சுகளுக்கும் வேறுபடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பூச்சி, கூச்சமானதா அல்லது துணிவானதா என்பதை, அவை அபாயகரமான சூழலில் எப்படி செயல்படுகின்றன அல்லது தங்களின் இருப்பிடங்களில் இருந்து எவ்வளவு நேரத்தல் வெளியே வருகின்றன என்பதை கொண்டு அறியலாம்" என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரன எனிககோ கையரிஸ்.
இந்த ஆய்வின்போது, ஒரு குறிப்பிட்ட பூச்சியின் வசிப்பிடத்தின் அருகே சில பொருட்களை விஞ்ஞானிகள் வைத்தர்கள். அப்போது எவ்வளவு வேகமாகப் பூச்சகள் அந்தப் பொருட்களை அடைகின்றன, ஆராய்கின்றன, எந்த வேகத்தில் அவை நகர்கின்றன என்று கவனமாகக் கண்கணித்தார்கள். அந்த ஆய்வில், ஒவ்வொரு பூச்சியும் ஒவ்வொரு விதமாக நடநது கொண்டது. ஒரு பூச்சி தயக்கம் கொண்டது அல்லது துணிச்சலானது என்று கண்டபிடிக்கப்பட்டல், அது எல்லா சூழ்நிலைகளிலும் அப்படியே நடந்து கொண்டது.
'கிரிக்கெட்' பூச்சிகளில் ஆதிக்கம் செலத்தும், தலைவர்களைப் போல நடந்துகொள்ளும் ஆண் பூச்சிகள், பெண் பூச்சிகளை எளிதில் கவர்ந்து விடுவது தெரிய வந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
படித்தது...
சோ.ஞானசேகர்.
இயற்கையை இயற்கையாக இருக்க உதவுங்கள்.
4 comments:
பகிர்வுக்கு நன்றி ஐயா...
வருகைக்கு நன்றி ஆ.ஞானசேகரன் அவர்களே...
சோ.ஞானசேகர்.
இயற்கைய எங்க இயற்கையா இருக்க விடுறோம். எல்லாத்தையும்தான் கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிட்டிருக்கமே.
இடுகைக்கு வருகை தந்தமைக்கு நன்றி.
நம்மால் முடிந்த வரை இயற்கையை அழிக்காமல் இருக்கும்படி சொல்வோமே.
சோ.ஞானசேகர்.
Post a Comment