Saturday, October 30, 2010

புதிய விலங்கினங்கள்

புதிய விலங்கினங்கள்
  உலகில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத அறிய விலங்கினங்கள் இருக்கின்றது அவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட சில புதிய உயிரினங்கள் பசிப்பிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாப்புவா நியூகினியா தீவில் 200-க்கும் மேற்பட்ட புதிய தாவர, விலங்கினங்களை வி்ஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் வெள்ளை வால் எலி, நீண்ட மூக்கு கொண்ட தவளை போன்ற விந்தை உயிரினங்களும் அடக்கம்.
   இந்த பாலூட்டிகள், இருவாழ்விகள், பூச்சிகள், தாவரங்கள் இதுவரை உலகம் அறியாதவை.
   இதுபற்றி ஆய்வாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்ஸ் கூறும்போது, "இன்று, முற்றிலும் புதுவகையான பாலூட்டிகளைக் கண்டுபிடித்திருப்பது மிகவும் அதிசயமானது. மரம் ஏறும் கங்காரு போன்ற உயிரினங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் இதுமாதிரியான விந்தையான சின்னச்சின்ன உயிரினங்களைக் காணும்போது நமது ஆச்சரியம் கூடுகிறது" என்கிறார்.
  இன்று உலகில் எஞ்சியிருக்கும் இரண்டு செழுமையான மழைக் காடுகளான அமேசான் காங்கோ வடிநிலப்பகுதி ஆகியவற்றுக்கு இணையானது பாப்புவா நியூகினியா மழைக்காடு.
  "பல்லுயிரினங்களின் கிடங்காகத் திகழும் பாப்புவா நியூகினியாவில் எண்ணற்ற புதிய உயிரினங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள்" ரிச்சர்ட்ஸ் குழுவினர்.
   இவர்கள் கண்டுபிடித்திருக்கும் புதிய உயிரினங்களில் 'மிகவும் அழகான' வெளளை வால் எலி, இரண்டு சென்டி மீட்டர் அளவுக்கு நீளமான மூக்குக் கொண்ட தவளை, பளிச்சென்ற மஞ்சள் நிறப் புள்ளிகள் கொண்ட தவளை ஆகியவை குறிபிடத்தக்கவை. மேலும் பூச்சியினங்கள், சிலந்திகளில் மட்டும் தலா 100 புதிய வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
   தவளைகள், ஊர்வனவற்றில் நிபுணரான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், ''பாப்புவா நியூகினியாவில் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நீங்கள் சாதாரணமாக ஓர் உலா சென்றாலே ஒரு புதிய உயிரினத்தையோ, அதிகம் அறியப்படத அதிசயமான ஒன்றையோ காணலாம்'' என்கிறார்.
  பாப்புவா நியூகினியாவின் கரடு முரடான, மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக அங்கு அதிகமாக உயிரியல் ஆய்வாளர்கள் செல்லவில்லை. தற்போது புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்திருக்கும் ஆய்வாளர்கள், இன்னும் இங்கு பெரும்பாலன பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.


சோ.ஞானசேகர்...

செழுமையான மழைக் காடுகள் இயற்கையின் அழகு.....

No comments: