Tuesday, November 17, 2009

ஜப்பான் ரெயில் நிலையங்கள் உஜாலாவுக்கு மாறுகிறது.



   ஜப்பனில் ஓடும் ரெயில்கள் முன்பு குதித்து தற்கெலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகிறது. தற்கொலை எண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்ற ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர்ந்து கொண்டிருக்க, தற்சமயம் ஒரு புதுமையான ஐடியாவை ஜப்பானில் செயல்படுத்துகிறார்கள்.

  பிளாட்பாரங்களின் முனைகளில், நீல வண்ணத்தை மென்மையாகப் பரப்பும் விளக்குகளைப் பெருத்தியிருக்கிறார்கள். நீல வண்ணம் சஞ்சலமற்ற மனதுக்கு ஒருவித ஆறுதலையும் நிம்மதியையும் தருவதக ஆராய்ச்சிகள் ஓரளவு நிரூபிக்கின்றன.

  டோக்கியோவின் மத்திய ரெயில் பாதையில் உள்ள 29 ரெயில் நிலையங்களிலும் 'ப்ளு லைட்' போடப்பட்டிருக்கிறது.

    நீல வெளிச்சம் மனித மனத்தின் எண்ணங்களை மாற்றுகிறது என்பது அறிவியல் ரீதியாக நூற்றுக்கு நூறு நிருபிக்கப்படவில்லை என்றாலும், நீலம் மனதை அமைதிப்படுத்துகிறது என்கிறார்கள் சில மனவியல் நிபுணர்கள்.

   தற்கொலை எண்ணிக்கையை குறைத்தே ஆக வேண்டும் என்ற அவசியத்தில் இப்போது ஜப்பான் இருக்கிறது. 2003 இல் தற்கொலை செய்து கொண்டவர்கள் 34427.

  சென்ற ஆண்டு ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம். இந்த ஆண்டு எண்ணிக்கை அதை முறியடிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இப்படித் தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலானவர்கள் பிளாட்பாரத்தின் முனைகளில் தயாரக நின்று கொண்டிருந்து ரெயில் வரும்போது சரியாகக் குதித்து விடுகிறார்கள் என்பதால் அந்த அந்த முனைகளில் நீல விளக்கு மாட்டப்பட்டு அங்கிருந்து பிளாட்பாரம் முழுவதும் நீல வண்ணத்தில் குளிக்கும்படியாக வெளிச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது.

    ஜப்பானில் நீல விளக்கை மாட்டியிருக்கிறார்கள்  நம்நாட்டில் ரெயிலில் தற்கொலை, எதிர்பாரமல் அடிபடுவது, செல்போனில் பேசிக்கொண்டு அடிபடுவது இவர்களை எப்படி திருத்துவது. எந்த விளக்கை மாட்டுவது. என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

நீலம் நல்லது செய்தால் சரி.


படித்தது...
நன்றி....


சோ.ஞானசேகர்.

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நல்ல செய்தி... நல்ல பகிர்வு

அய்யா உங்களின் பின்னூட்டத்தில் உள்ள word verification ஐ எடுத்துவிட்டால் பின்னூட்டம் அழிப்பவர்களுக்கு சிரமம் தவிற்கப்படலாம்(என்னை போன்ற சொம்பலுக்கு)


மிக்க நன்றி ஐயா

கூவலப்புரம் said...

மிக்க நன்றி ஞானசேகரன்.