உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் காட்டுத்தாவரங்கள் உணவுத் தாவரங்களுக்கு மிகவும் நெருக்கமானவைதான், அவற்றை உணவாக உண்ணவும் முடியும். ஆனால், இவை பல்வேறு வகையான சூழ்நிலைகளிலும் தாக்குப் பிடித்து வாழக்கூடியவையாகும்.
இருக்கக்கூடிய வளங்களை பயன்படுத்தி, அவற்றுக்கு அமைவாய் இவை வாழக்கூடியவை.
இருந்தபோதிலும், இவற்றில் பெரும்பாலானவை அவற்றை பராமரிக்கும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள, மத்திய கிழக்கின் மோதல் வலயத்தில் வளர்கின்றன.
உலகில் இப்படியான காட்டுத் தானிய வகைகள் சிறப்பாக வளரக் கூடிய பல இடங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அந்த இடங்களில் இவற்றை பராமரித்து வளர்த்தால், எதிர்கால உணவுத் தேவைக்கான மூலமாக இவை பயன்படுத்தப்படலாம்.
பலதரப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதற்காக இந்த காட்டுத் தாவரங்களையும், வழமையான உணவுத் தாவரங்களுடன் சேர்த்து விவசாயிகள் வளர்க்கிறார்கள். உள்ளூர் காலநிலைக்கு தாக்குப் பிடித்து வாழக்கூடிய தாவரங்களை வளர்ப்பது இவர்கள் நோக்கமாகும்.
வெறுமனே காட்டு உணவுத்தாவரங்களை வளர்ப்பது என்பது அல்லாமல், விவசாயிகளும், தாவரங்களை வளர்ப்போரும், காலநிலை மாற்றத்துக்கு தக்கதான தாவரங்களை உருவாக்க உதவுவதே தமது நோக்கம் என்று கூறுகிறார் ப்ர்ர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைஜல் மாக்ஸ்ட்டெட்.
காட்டுத் தாவரங்களில் பயனுள்ள உணவு வகைகளும், வரட்சியை தாக்குப் பிடிக்கும் வகைகளும் அடங்கும்.
2050 அளவில் 9.6 பில்லியனாக அதிகரிக்கவுள்ள உலக மக்கள் சனத்தொகையின் உணவுத்தேவைக்கு இந்தக் காட்டு உணவுத் தாவரங்கள் மிகவும் அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...