Thursday, November 10, 2011

2015-க்குள் ஆர்க்டிக் கடல் ஐஸ்கட்டி முழுவதும் உருகிவிடும்

   2015-க்குள் ஆர்க்டிக் கடலில் உள்ள ஐஸ்கட்டி முழுவதும் உருகி தண்ணீராக மாறிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானி பீட்டர் வதம்ஸ் தெரிவித்துள்ளார்.
   அவ்வாறு ஐஸ் கட்டி முழுவதும் உருகிவிட்டால் அங்கு வாழும் துருவக் கரடி உள்ளிட்ட உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ் பூமியின் வடதுருவத்தில் உள்ள ஆர்க்டிக் கடல் குறித்து கடந்த பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார். அவரது ஆய்வில் அந்தக் கடலின் ஐஸ் கட்டிகள் முழுவதும் விரைந்து உருகி வருவது தெரியவந்துள்ளது.
   ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் உருகி வருவதற்கு சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருவதே காரணம். சமீபகாலமாக ஐஸ் கட்டி விரைந்து உருகுவது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
   ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் 2030-க்குள் உருகும் என்று பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கமிட்டி ஏற்கெனவே அறிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்த பல்வேறு ஆய்வாளர்களும் ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் முழுவதும் உருகுவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
   ஆனால் பிரிட்டிஷ் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வதம்ஸ், ஆர்க்டிக் கடல் ஐஸ் கட்டிகள் 2030-வரை இருக்காது. அவை நிச்சயம் 2015-க்குள் உருகிவிடும் என்று கூறியுள்ளார்.

நண்றி தினமணி நாளிதழ்...

''வானத்தின் மழைத்துளி வையத்தின் உயிர்த்துளி''
''மழை நீரை சேகரிப்போம்''

2 comments:

Karthikeyan Rajendran said...

ketkave payamaa irukku

S.Gnanasekar said...

நன்றி !ஸ்பார்க் கார்த்தி அவர்களே.