Wednesday, March 31, 2010

பப்பாளி
பப்பாளி ஒரு பழந் தரும் மரமாகும் பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் சுவையா இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு மிளகு போல் இருக்கும்.

விட்டமீன் ஏ அதிகமாக உள்ளது. சிறிதளவு பி1, பி2 உள்ளது.  நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.  பித்தத்தைப் போக்கும் நிறைய நோய்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

இப்போது பப்பாளியில் புற்றுநோய்களுக்கான எதிர்ப்பு மருந்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் இருக்கிறார்கள். வாய், தொண்டை, கல்லீரல், நுரையீரல், இரப்பை, மூளை என பல உறுப்புகளையும் பாதிக்கும் வெவ்வேறு வகை புற்றுநோய்கள் இருக்கின்றன.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பப்பாளி இலையில் புற்றுநோய் வைரஸ்களை எதிர்க்கும் டி.எச்.1 டைப் சைடோகின்ஸ் என்னும் மூலக்கூறுகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து புற்று நோய் தீவிரத்தை கட்டுக்குள் வைக்கிறது.

புளோரிடா பல்கலைக்கழகம் ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள கட்டுரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

படித்தது..

சோ.ஞானசேகர்...
    வாழைப்பழம்
வாழை மரம் இது மனிதனை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது இதனுடைய இலை, காய், பழம், பூ, தண்டு, நார் எல்லா பகுதிகளும் நமக்கு பயண்படுகிறது.

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடுயது.

வைட்டமின் எ, பி1, பி2, பி6 மற்றும் வைட்டமின் சி இது தவிர பொட்டாசியம், நார்ச்சத்துகள் மெக்னீசியம் போன்றவையும் காணப்படுகிறது. அதிக அளவில் கார்போ ஹைட்ரேட் உள்ளது எளிதில் ஜீரணம் ஆகும். இது பழைய கதை. இப்போது இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒரு வகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஜ.வி. வைரசை ஒடுக்கும் தன்மை உடையது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்கியை வழங்கும். அத்துடன் எச்.ஜ.வி. கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.

நல்ல பலன்தரும் வாழைப்பழத்தை சாப்பிட்டு நாமும் நலமுடன் இருப்போமே!

சோ.ஞானசேகர்..