துப்பாக்கிக்கலாச்சாரம்
இன்றைய தினத்தில் உலகிலேயே துப்பாக்கிக்கலாச்சாரம் வேகமாகப் பெருகி வருவது தென்ஆப்பிரிக்காவில்தான். அதுவும் எப்படி? ஆளுக்கு ஆள் சுட்டுக் கொள்வது.
அதிலும் சமிபத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பீதியையும், பரபரப்பையும் பிரிடோரியாவில் ஏற்படுத்திவிட்டது. அங்கே ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் ஒருவன் கம்ப்யூட்டர் திருவதைப் பார்த்த சார்ஸ் ஷீப்பரிஸ் என்ற வெள்ளை போலீஸ் அதிகாரி அவனை பாய்ந்து சென்று பிடித்தார். ஆனால் அந்தக் கொள்ளையன் அவரைச் சுட்டுக் கொன்றான். அந்த அதிகாரிக்கு மூன்று குழந்தைகள். கண்ணீர் மல்க அவரது மனைவி வெளியிட்ட அறிக்கையில் 'நாட்டில் இப்போது கிரிமினல்கள் வென்று வருகிறார்கள். இதை அனுமதிக்க கூடாது. என் கனவர் அந்தப் பாவியைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.துப்பாக்கியை கீழே போடு என்று மூன்று முறை அவர் கேட்டும் அவன் கேட்கவில்லை' என்று கூறியிருக்றார்.
போலீஸ் கமிஷனர் எனக்கு 'வரும் கேள்விகள் பெரும்பாலும் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களிடமிருந்துதான். இன்னும் எத்தனை போலீஸ் விதவைகளும், அனாதைகளும் எண்ணிக்கையில் கூட வேண்டும்? என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை' என்கிறார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேகப் ஸூமாவும் குழம்பிப் போய் எப்படி இந்தத் துப்பாக்கி கலாசாரத்தை நசுக்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அவரே தெரிவித்த சில புள்ளி விவரங்கள்: 1. உலகில் அதிக கொலைகள் நடைபெரும் நாடுகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. 2. சென்ற ஆண்டில் மட்டும் 18 ஆயிரம் கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. 3. இந்த நாட்டில் அனேகமாக ஒவ்வொருவனும் துப்பாக்கி வைத்திருக்கிறான்.
சமிபத்திய ஆய்வின்படி வானவில் நாடு என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிகாவில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 50 பேர் கொல்லப்படுகிறார்கள்.
'எவனாவது துப்பாக்கியை எடுத்தால் உடனே அவனைச் சுடு' என்று போலீஸூக்கு அனுமதி தந்திருக்கிறார் ஸூமா.
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் அங்கு நடை பெற இருக்கின்றன.
துப்பாக்கிகள் கோல் போட்டுவிடக்கூடாது.
S.Gnanasekar
3 comments:
//துப்பாக்கிகள் கோல் போட்டுவிடக்கூடாது. //
உண்மைதான்... உங்களின் எண்ணங்கள் புரிகின்றது...
Google not working...so in English. I happen to see a english movie about kids using gun in South Africa... my god, I waas astonished, I don't know whether it was true ...or streaching the story too far, .... India is heaven. I belive Pakisthan and Afganisthan is also getting bad to worse.
என்ன செய்வது உலகம் எங்கே பொய் முடியும் என்று தெரியவில்லை
Post a Comment