பூமியில் மட்டுமே
சூரியக்குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. மற்றக் கிரகங்களில் இதுவரை எந்த உயிரினங்களும் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், உயிர் வாழ்வதற்கு அவசியமானவை காற்றும், நீரும். மற்ற கிரகங்களில் இல்லை. இரும்பினும், எதிர்காலத்தில் பிற கிரகங்களில் வாழ்வது குறித்து ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைப்பு
பூமி, உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வகையில் சுழன்று கொண்டிருக்கிறது. அத்துடன் சூரியனையும் சுற்றி வருகிறது. இரவு, பகல் என்ற வேறுபாடு தோன்றுகிறது. நம்முடைய பூமி, மிகப்பெரிய காந்தமாகத் திகழ்கிறது. அதன் மையப்பகுதியானது நிக்கல், இரும்பு மூலகத்தைக் கொண்டதாக இருக்கிறது. பூமியின் காந்த சக்திக்கு இதுதான் காரணம்.
நிலவினால் ஆபத்து
நிலவினால் பூமிக்கு ஆபத்து ஏற்படும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். காரணம் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் இதில் ஓரளவுக்கு மட்டுமே உண்மை இருக்கிறது. அதாவது நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியின் சுழற்சி வேகம் குறையும் என்பது உண்மை. ஆனால், பூமியின் சுழற்சி வேகம் இரண்டு மில்லியன் விநாடிகள் (ஏறத்தாழ 20 லட்சம் வினாடிகள்) மட்டுமே குறையுமாம். அதுவும் நூறு வருடங்களுக்கு ஒருமுறை. எனவே, பயப்படத் தேவையில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அப்படியானால் இப்போது உள்ளதைவிட ஏற்கனவே அதிக வேகத்தில் பூமி சுற்றியிருக்கும் அல்லவா? அப்போது ஒருநாளைக்கு 18 மணி நேரம்மட்டும் தானாம். அதேபோல் ஒரு வருடத்திற்கு 481 நாட்கள் இருந்ததாம்.
பூமியின் வாயுமண்டலம்
பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு வாயு மண்டலம் தான் காரணம். இதிலிருந்து தான் நாம் சுவாசிப்பதற்கான பிராணவாயு என்று சொல்லக்கூடிய ஆக்சிஜன் கிடைக்கிறது. வாயுமண்டலத்தில் அதிகமாக இருப்பது நைட்ரஜன் வாயுதான் 70 சதவீதத்திற்கு அதன் பங்கு இருக்ககிறது. ஆக்சிஜன் 21சதவீதமும், மற்ற வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து 2சதவீதமும் உள்ளன. காற்றின் அழுத்தமும், அடர்த்தியும் பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல குறைந்து கொண்டே வரும்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் சுமார் 14 கோடியே 96 லட்சம் கிலோமீட்டர்கள். சூரிய ஒளி பூமியை வந்தடைய தோராயமாக 8 நிமிடங்கள் ஆகிறதாம்.
பூமி எங்கே இருக்கிறது
பூமி எங்கே இருக்கிறது என்று கேட்டால் நம் காலடில் இருக்கிறது என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். ஆனல், சூரியக்குடும்பத்தில் பூமி எங்கு இருக்கிறது சூரியனில் இருந்து மூன்றவதாக பூமி இருக்கிறது. இதுமட்டும் தற்போது சனிக்கிரகம் இருக்கும் 6-வது இடத்தில் இருக்குமானால், சூரிய ஒளி கிடைக்காமல் பூமியில் உயிரினங்களே தோன்றி இருக்காது. அல்லது சூரியனிலிருந்து மிக அருகில் இருந்திருந்தால், கடும் வெப்பத்தின் காரணமாகவும் உயிர்கள் தோன்றியிருக்காது. நாம் எவ்வளவு பெரிய அதிசயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்ததா?
சோ.ஞானசேகர்.
இவ்வளவு அதிசயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் பூமியின் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்போம்...